தேவையான பொருட்கள்
மைதாமாவு - 2/3 கிண்ணம் பால் - 4 கிண்ணம் சர்க்கரை - 3/4 கிண்ணம் தண்ணீர் - 1/2 கிண்ணம் சமையல் எண்ணெய் - பொரிக்க பொடியாக ஒடித்து வறுத்த முந்திரிப் பருப்பு - 1 மேசைக்கரண்டி
செய்முறை
சர்க்கரையுடன் தண்ணீர் கலந்து கொதிக்க விடவும். தொட்டுப் பார்த்தால் பிசுக்கென்று இருக்கும் போது இறக்கி வைத்துக் கொள்ளவும். பாலை அடுப்பில் வைத்து 2 கிண்ணம் அளவுக்கு (பாதியாக) குறுக்கவும். இது நன்கு ஆறிய பின்னர் மைதாமாவைத் தூவி அப்ப மாவுப் பதத்துக்கு கெட்டியாக கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு இந்த மாவைக் காய்ந்த எண்ணெயில் சிறிது சிறிதாக ஊற்றி, வெந்ததும் எடுத்து சூடான சர்க்கரைப் பாகில் அமிழ்த்தி வைக்கவும். இவற்றை மொறமொறப்பாக வேகவிடமால் பஞ்சு போல வேகவைத்தால் தான் பாகில் நன்கு ஊறிவிடும். சிறிது நேரம் ஊறிய பின்னர் பாகிலிருந்து எடுத்து வைக்கவும். சாப்பிடுமுன் இதன்மீது வறுத்த முந்திரியைத் தூவி விடவும்.
சரஸ்வதி தியாகராஜன், டேடன், ஒஹையோ |