பழ பர்பி
தேவையான பொருட்கள்

வாழை, மா, பலா, பேரீச்சை போன்ற பழம் ஒன்றின் கூழ் - 1 கிண்ணம்
பால் பவுடர் - 2/3 கிண்ணம்
கோகோ தூள் - 1/4 கிண்ணம்
சர்க்கரை அல்லது பழுப்புச் சர்க்கரை - 3/4 கிண்ணம்
வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
வறுத்து ஒடித்த முந்திரிப் பருப்பு - சிறிதளவு

செய்முறை

பால் பவுடரையும் கோகோவையும் சேர்த்துச் சலித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு மேசைக்கரண்டி வெண்ணெயை அடிகன மான ஒரு வாணலியில் போட்டு, மிதமான தீயில் அடுப்பில் வைத்து பழக்கூழையும் சர்க்கரையும் சேர்த்துக் கிளறவும். அது நன்கு சுருண்டு வந்ததும் பால் கோகோத் தூளைச் சிறிது சிறிதாகத் தூவி, மீதி வெண்ணை யையும் சேர்த்து நன்கு கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாத பதம் வந்த பின்னர் அதை ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி, அதன் மீது முந்திரிப் பருப்பைத் தூவி விடவும். ஆறியபின்னர் வில்லைகளாகப் போடவும்.

சரஸ்வதி தியாகராஜன், டேடன், ஒஹையோ

© TamilOnline.com