தேவையான பொருட்கள்
ராகிமாவு - 1 கிண்ணம் அரிசிமாவு - 1 கிண்ணம் பொரிகடலை மாவு - 1/8 கிண்ணம் வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி பொடித்த சர்க்கரை - 1/4 கிண்ணம் சமையல் எண்ணெய் - பொரிக்க உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை
சர்க்கரையைத் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். எல்லாப் பொருட்களையும் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டுக் கலந்து, சர்க்கரை கரைந்த தண்ணீரைச் சேர்த்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து பத்து நிமிடங்கள் கழித்து முள்ளு முறுக்கு அச்சில் போட்டு, காய்ந்த எண்ணெயில் பிழிந்து, இருபுறமும் பொன்னிறமாகப் பொரித்து எடுத்து வடிய வைக்கவும்.
சரஸ்வதி தியாகராஜன், டேடன், ஒஹையோ |