தேவையான பொருட்கள்
பொட்டுக்கடலை மாவு - 1/2 கிண்ணம் கடலைமாவு - 1/2 கிண்ணம் அரிசிமாவு - 3/4 கிண்ணம் பச்சை மிளகாய் விழுது- 1/2 தேக்கரண்டி பெருங்காயத் தூள் - 1/2 சிட்டிகை உப்பு - தேவைக்கேற்ப சமையல் எண்ணெய் - பொரிக்க
எல்லாப் பொருட்களையும் தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். முறுக்கு அச்சில் இந்த மாவை எலுமிச்சை அளவு போட்டு, காய்ந்த எண்ணெயில் பிழிந்து, இருபுறமும் பொன்னிறமாகப் பொரித்து எடுத்து வடியவைக்கவும்.
சரஸ்வதி தியாகராஜன், டேடன், ஒஹையோ |