சினிமாயா குழுமத்தின் இந்திய அமெரிக்க சாதனையாளர் விருதுகள்
தெற்காசிய ஊடக, கேளிக்கை, சந்தை நிறுவனமான சினிமாயா மீடியா குரூப் முதன்முறையாக 'சினிமாயா மீடியா குரூப் இந்திய மற்றும் அமெரிக்க சாதனையாளர்' விருதுகளை வழங்கத் தொடங்கியுள்ளது. இதற்கான விழா செப்டம்பர் 13, 2007 அன்று வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஜான் எப். கென்னடி நிகழ்கலைகள் மையத்தில் நடைபெற்றது. கீழ்க்கண்ட விருதுகள் வழங்கப்பட்டன:

புதுமையாக்கம், அறிவியல் & தொழில்நுட்பம்:

இந்தியா: N.R. நாராயண மூர்த்தி, தலைமை வழிகாட்டுனர், இன்போஸிஸ்

அமெரிக்கா: பில் கேட்ஸ், சேர்மன், மைக்ரோசாப்ட்

கலைகள், கேளிக்கை, ஊடகம்:

இந்தியா: ஏ.ஆர். ரஹ்மான்

அமெரிக்கா: ரிச்சர்ட் கெரே

பன்னாட்டுக் குழுமம்:

இந்தியா: டாடா குழுமம்

அமெரிக்கா: நியூயார்க் லைப் இன்சூரன்ஸ் குழுமம்

காந்தி வாழ்நாள் சாதனை விருது:

இந்தியா: தீருபாய் அம்பானி

அமெரிக்கா: பில் கேட்ஸ், சேர்மன், மைக்ரோசாப்ட்

அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மேதகு ரோனன் சென் அவர்கள் இந்நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராகப் பங்கேற்றார். விஜய் நம்பியார் (செ·ப் டி கேபினட், ஐ.நா. சபை), ஜஸ்ஸல் (டெபுடி சீ·ப் ஆ·ப் மிஷன், இந்திய தூதரகம்), தீபக் ஓப்ராய் (கனடாவின் வெளிநாட்டு அமைச்சருக்குப் பாராளுமன்றச் செயலர்) உட்படப் பல முக்கியப் பிரமுகர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
மாலையில் நடந்த விசேட விருந்தில் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவுடன் பண்டிட் அஜய் சக்ரவர்த்தி இணைந்து ஒரு ஜுகல்பந்தியை வழங்கினார். தவிர பண்டிட் பிர்ஜு மஹராஜின் கதக் நடனமும், பண்டிட் சிவகுமார் சர்மாவின் சந்தூர் இசையும் இடம்பெற்றன. நிகழ்ச்சியை பாலிவுட் நடிகர் குனால் கேமு தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிகளைப் பற்றிய தொகுப்பை இணையத்தில் காண: http://www.cinemayamedia.com/awards
பலதுறைகளில் சிறப்பாகப் பயிலும் இந்திய-அமெரிக்க மாணவர்களுக்குத் தமது துறையில் கல்வியைத் தொடர்வதற்கான உதவித்தொகை வழங்கவும் சினிமாயா மீடியா தீர்மானித்துள்ளது. இதற்கான விதிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும்.

அதிக விபரங்களுக்கு:
நித்யா கார்த்திக்
தொலைபேசி: 212-242-5400
மின்னஞ்சல்: awards@cinemayamedia.com

சினிமாயா செய்திக் குறிப்பு

© TamilOnline.com