அக்டோபர் 6, 2007 அன்று சிகாகோ தியாகராஜ உத்சவம் அமைப்பு மாபெரும் கர்நாடக இசைப் போட்டி ஒன்றை நடத்தியது. இ·து இவ்வமைப்பின் மூன்றாவது இசைப்போட்டி. நூற்றுப் பத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கு கொண்ட இவ்விசைப்போட்டி செவ்வனே நடைபெற எடுத்துக் கொண்ட எச்சரிக்கைகளும் ஏற்பாடுகளும் எண்ணிலடங்காது. தியாகராஜ கிருதிகளை மூன்று பகுதிகளாகப் பிரித்து அமைத்துக் கொண்டோம். போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் தமது பயிற்சித் தரத்துக்கு ஏற்ப ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கிருதியைத் தேர்ந்தெடுத்துப் பாடி மின்வட்டில் பதித்து அனுப்ப வேண்டும் என்பதாக வைத்திருந்தோம்.
இவற்றைப் பரிசீலனை செய்து தரவாரியாக மதிப்பெண்கள் வழங்கி முதல் 30 பேரைத் தேர்ந்தெடுத்து அனுப்பும் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர் மல்லாடி சகோதரர்கள் என்று அறியப்படும் ஸ்ரீராம் ப்ரசாத் மற்றும் ரவிக்குமார்.
இவர்களில் வாய்ப்பாட்டு, வயலின், புல்லாங்குழல், வீணை, மிருதங்கம் எனத் தரம் பிரிக்கப்பட் வெவ்வேறு மட்டங்களில் நேரிடையாகவே நடுவர்களான எம்பார் கண்ணன், நெய்வேலி நாராயணன் ஆகியோர் முன்னிலையில் போட்டி நடந்தது. பதினோரு குழந்தைகள் பரிசு பெற்றனர். முதற்பரிசு $250, இரண்டாம் பரிசு $100, மூன்றாம் பரிசு $50. வாய்ப்பாட்டு, வாத்ய இசை, தாள லயங்கள் என்று மூன்று பிரிவுகளில் நடந்தது. குழந்தைகள் ரொம்பவும் தைரியமாகக் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் அளிப்பதும் க்ருதிகளின் அனுபல்லவி, சரணம் இவற்றைக் கேட்டவுடன் பாடிக் காட்டுவதும் யாவரையும் வியப்பிலாழ்த்தியது. ஒரு இசை ஆர்வமுள்ள பெண் மருத்துவர் இதற்கெனவே ஓர் அறக்கட்டளை ஏற்படுத்தி இதற்கான மொத்தச் செலவையும் ஏற்றுக் கொண்டுள்ளார்.
பரிசுபெற்ற குழந்தைகள் பாடல்களை இணையத்தில் கேட்க: www.tyagaraja-chicago.org
பரிசுபெற்ற குழந்தைகள்:
தரப்பிரிவு 1: சந்தீப் பரத்வாஜ் - வயலின் - முதல் பரிசு ஸ்ரீக்ருஷ்ண சிவகுமார் - வாய்ப்பாட்டு - முதல் பரிசு சுப்ரஜா சிட்டாரி - வாய்ப்பாட்டு - இரண்டாம் பரிசு ப்ரீதிகேசவன் - வாய்ப்பாட்டு - மூன்றாம் பரிசு
தரப்பிரிவு 2: சசிதர் மடுகலா- வயலின் - முதல்பரிசு சஞ்சய் சுப்ரமண்யம் - மிருதங்கம் - முதல்பரிசு சுதீக்ஷணா வீரவல்லி - வாய்ப்பாட்டு - முதல்பரிசு ஆனந்த் சேலம் - வாய்ப்பாட்டு - இரண்டாம் பரிசு
தரப்பிரிவு 3: சில்பா சடகோபன் - வாய்ப்பாட்டு - முதல் பரிசு நிகிடா ரகுநாத் - வாய்ப்பாட்டு - இரண்டாம் பரிசு வித்யா ராகவன் - வாய்ப்பாட்டு - மூன்றாம் பரிசு
டி.ஈ.எஸ். ராகவன் |