2007 நவம்பர் 21 முதல், டிசம்பர் 2 வரை, 'அம்மா' ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி அவர்கள் கலிபோர்னியா வளைகுடா பகுதிக்கும், மிச்சிகனில் உள்ள டியர்பார்னுக்கும் வருகைதர இருக்கிறார். தெய்வீக குணங்களின் இருப்பிடமாகத் திகழும் அம்மாவை, 'அரவணைக்கும் ஞானி' (Hugging Saint) என்று அழைக்கிறார்கள். தம்மிடம் வருவோர் ஒவ்வொருவரையும் பரிவோடு அரவணைத்து, தமது அளவற்ற அன்பை அம்மா வாரி வழங்குகிறார்.
அம்மா வருகை தர இருக்கும் ஊர்களும், தேதிகளும்:
சான் ரமோன், கலிபோர்னியா நவ. 21 - நவ. 26 டியர்பார்ன், மிசிகன் நவ. 28 - டிச. 02
இரண்டு இடங்களிலும், இலவசப் பொது நிகழ்ச்சிகள் மற்றும் ஆன்மீக முகாம்கள் நடைபெற உள்ளன. இலவசப் பொது நிகழ்ச்சிகளில் அம்மாவின் தரிசனம், சொற்பொழிவு, தியானம், பஜனை ஆகியவை நடைபெறும். ஆன்மீக முகாமில் (retreat) தியான வகுப்புகள், தன்னலமற்ற சேவை, அம்மாவோடு கேள்வி-பதில், அம்மாவின் உணவு பரிமாறல், ஒருங்கிணைந்த அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை நடைபெறும்.
மேலும் விபரங்களுக்கு: www.amma.org
சூப்பர் சுதாகர் |