பாடுகிறார் ரகுவரன்
ஐந்து மாணவ, மாணவியர் பற்றிய கதை ஒன்றை 'தொடக்கம்' என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரிக்கிறார் கே.எஸ். விஜயேந்திரன். இப்படத்தில் முக்கியப் பாத்திரம் ஒன்றில் நடிக்கிறார் ரகுவரன். இவருடன் மோனிகா, ரிஷி, ரமேஷ்கண்ணா, சுலக்ஷணா, பல்லவி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

படத்துக்கான கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தை கவனிக்கிறார் முத்துகுமார். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கதாபாத்திரத்தில் ரகுவரன் நடிப்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் ரகுவரன் முதன்முதலாகப் பாடல் ஒன்றையும் பாடியிருக்கிறார்.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com