எல்லோரும் ஐ.டி. துறைக்குச் சென்று விட்டால்...
எல்லோரும் ஐ.டி. துறைக்குச் சென்று விட்டால்...

அறிவியல் படிக்க குறைவான மாணவர்களே ஆர்வம் காட்டுகின்றனர். இது ஆபத்தான சூழல். எல்லோரும் ஐ.டி. துறைக்குச் சென்று விட்டால் இந்தியா அடிமை நாடாக மாறிவிடும்.

டாக்டர் அனந்தகிருஷ்ணன், முன்னாள் துணை வேந்தர், அண்ணா பல்கலைக் கழகம்

*****


எந்த மதமும் பெண்களுக்கு எதிரானது அல்ல. ஆனால், இடையில் வந்தவர்கள் தங்களது கருத்துகளை மதத்தின் மீது திணித்து பெண்களை அடக்கி வந்தார்கள். மதங்களைக் கடந்து அடையாளம் காணப்பட வேண்டியவர்கள் பெண்கள். தங்களுக்கு எதிரான சமூகத் திணிப்புகளை எதிர்த்து அவர்கள் போராட வேண்டும்.

கவிஞர் கனிமொழி

*****


சிறந்த மேடைப் பேச்சு என்பதே ஒரு ஏமாற்று வேலை. பேச்சுக்கலை என்பது மகுடி ஊதி மக்களைத் தலையாட்ட வைக்கும் சூழ்ச்சி.

தங்கர் பச்சான்

*****


நானாக விருப்பப்பட்டு அரசியலுக்கு வரவில்லை. அரசியலை எனது தொழிலாகவும் தேர்வு செய்யவில்லை.

அரசியலில் நீண்டகால குறிக்கோள்களை அடைய குறுகியகால மோதல்களைச் சமாளித்து நிற்க வேண்டிய சங்கடம் இருப்பதாக நான் அறிவேன். தினசரி சவால்களை சமாளித்துக் கொண்டே நீண்டகால குறிக்கோள்களையும் அடைந்தாக வேண்டும்.

பிரதமர் மன்மோகன்சிங்

*****


ஒரு மனிதனின் சக்தி என்பது அவருடைய உற்சாகத்துக்கான எரிபொருள் போன்றது. அந்தச் சக்தியானது அளவுக்கு மீறி செலவழிக்கப்படும் போதுதான் மனிதனை இறுக்கம், துக்கம், சோர்வு, கோபம் போன்ற எல்லாமே ஆக்கிரமிக்க ஆரம்பிக்கின்றன.

சுவாமி பரமஹம்ஸ நித்யானந்தர்

*****


பக்கத்து ஊரில் ஆடப் போவதாக இருந்தாலும் நடந்து போய்த்தான் ஆடுவோம். அப்போது அப்படி நடந்து சென்றதுதான் இன்று எனக்கு இவ்வளவு தாக்குப் பிடிக்கும் தன்மையை (ஸ்டாமினாவை) கொடுத்துள்ளது. 5 நாட்கள் மைதானத்தில் ஓடினாலும் தளராத சக்தியைக் கொடுத்துள்ளது.

மஹேந்திர சிங் டோனி

தொகுப்பு:கே.டி.ஸ்ரீ, அரவிந்த்

© TamilOnline.com