'அம்மா, ஷாப்பிங் போயிட்டு வரலாமா?' முதல் பிரசவத்துக்கு உதவ வந்திருந்த அம்மாவைக் கேட்டாள் சரண்யா.
'கொஞ்சம் இரு வர்றேன்' என்று கையோடு ஒரு கவரையும் எடுத்துக் கொண்டு கிளம்பினாள் கோமதி.
போன இடத்தில் ·பார்மசியை பார்த்ததும் முகம் மலர்ந்த கோமதி 'மாப்பிள்ளை ·பார்மசியில் இந்த மருந்தைக் கொஞ்சம் வாங்கிக்கலாமா?' என்றாள்.
அவள் காட்டிய கவரைப் பார்த்து முதலில் திகைத்தாலும் உடனே லேசான சிரிப்புடன், 'என்ன அத்தை? வசம்புன்னு போட்டிருக்கு? அது எப்படி
இங்கே கிடைக்கும்?' என்றான் ஹரி.
'என்ன மாப்பிள சொல்றீங்க. பிரசவ மருந்துகளை எழுதி கொடுத்த மாமி 'எல்லா நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்' என்று எழுதியிருந்தாளே. அதை நம்பி வந்துட்டேனே' என்று அதிர்ந்தாள் கோமதி, ஹூஸ்டன் நகரில்.
முத்துலக்ஷ்மி சங்கரன் |