லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 'சாவித்ரி ஆர்ட்ஸ் அகடமி'யைப் பத்தாண்டுகளுக்கு மேலாக நடத்தி வரும் சிந்தூரி ஜெயசிங்காவுக்குத் தமிழ்நாடு அரசு 2007ஆம் ஆண்டின் கலைமாமணி விருதை அளித்து கௌரவித்துள்ளது.
இவரது அரங்கேற்றம் ஏழாவது வயதிலேயே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. அதற்குப் பிறகு பரதநாட்டியம், குச்சிபுடி ஆகிய நடன நிகழ்ச்சிகளை இந்தியா, ஸ்ரீலங்கா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் 2000 முறை மேடையேற்றியுள்ளார்.
கலைஞர் கருணாநிதி அவர்கள் எழுதிய திருக்குறள் நவரச நாட்டியத்தை வடிவமைத்து இவர் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் மேடையேற்றியுள்ளார். இந்தப் பாடல்களுக்கு எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பிறைசூடன் எழுதிய 'பிறை நிலவும் ஸ்ரீ ஹரியும்' (ராமானுஜர் வாழ்க்கையிலிருந்து), பெண் சிசுக் கொலை பற்றிய 'கண்களின் பேதமை' ஆகிய பிற நாட்டிய நாடகங்களும் இவருக்குப் புகழ் தேடித் தந்தன.
நாட்டிய கலையழகி, நல் நாட்டிய தரங்கிணி, நாட்டிய மணி, நாட்டியச் சுடர் ஆகிய பட்டங்கள் சிந்தூர் ஜெயசிங்காவுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இவர் கலைமாமணி பட்டத்தையே மிகச் சிறந்ததாகக் கருதுகிறார்.
மேலும் தகவல் அறிய: www.sinduri.net |