ஏதோ புதிய சினிமா ரிலீஸ் என்று நினைக்காதீர்கள். லெய்ன் கார்சனும் விஜய் வைத்தீஸ்வரனும் இணைந்து எழுதியுள்ள புதிய புத்தகத்தின் பெயர்தான் Zoom. தி எகனாமிஸ்ட் பத்திரிகையின் செய்தியாளர்களான இவர்களது இந்த நூல் 'தி பினான்சியல் டைம்ஸ்/கோல்ட்மன் சாக்ஸ் பிசினஸ் புக் ஆப் தி இயர்' பரிசின் இறுதிச் சுற்றை எட்டியுள்ளது. வாகனங்கள், பெட்ரோலியம் எண்ணெய் என்ற இரு தொடர்புடைய தொழில்களை எவ்வாறு பொருளாதார, அரசியல் விசைகள் தாக்கம் செய்கின்றன என்பதை இந்த நூல் ஆழமாக ஆய்வு செய்கிறது.
எம்.ஐ.டி.யில் பொறியியலாளராகப் பயிற்சி பெற்றுள்ள விஜய் சுமார் 10 ஆண்டுகளாக சுற்றுச்சூழல், ஆற்றல் ஆகிய துறைகளைப் பற்றி 'தி எகனாமிஸ்ட்' பத்திரிக்கையில் எழுதி வருகிறார். இவரது முந்தைய நூல் 'பவர் டு தி பீப்பிள்'.
இல்லாவிட்டாலும் விஜய் தென்றலுக்கு அன்புள்ள சிநேகிதர்தான்! ஆமாம், அவர் தென்றலின் மிக விரும்பிப் படிக்கப்படும் பகுதியான 'அன்புள்ள சினேகிதியே' பகுதியை எழுதும் டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன் அவர்களின் மகன். மேலும் அறிய: www.zoomtothepeople.com |