தேவையான பொருட்கள்
பன்னீர் - 150 கிராம் கடலை மாவு - 3/4 கிண்ணம் மைதா மாவு - 1 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப மிளகாய்ப் பொடி - 1 1/2 தேக்கரண்டி எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு
செய்முறை
பன்னீரை வேண்டிய அளவில் துண்டங்களாக வெட்டிக் கொள்ளவும். எண்ணெய் நீங்கலாக எல்லாப் பொருட்களையும் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். ஒவ்வொரு பன்னீர்த் துண்டமாக மாவில் தோய்த்துக் காய்ந்த
எண்ணெயில் போட்டு, பொன்னிறமானதும் எடுக்கவும். வடியவைத்துக் கொள்ளவும்.
சரஸ்வதி தியாகராஜன் |