நவம்பர் 2007: ஜோக்ஸ்
வக்கீல்: போஸ்ட் மார்ட்டம் ஆபரேஷன் செய்வதற்கு முன்னால் நாடியைச் சோதித்தீர்களா?

சாட்சி: இல்லை

வக்கில்: ரத்த அழுத்தம்?

சாட்சி: இல்லை

வக்கீல்: இருதயத்துடிப்பு?

சாட்சி: இல்லை.

வக்கீல்: அப்படியென்றால் அந்த ஆள் உயிருடன் இருந்திருப்பதற்கு வாய்ப்பு இருந்திருக்கலாம் இல்லையா?

சாட்சி: இல்லை. ஏனென்றால் அவனது மூளை ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் எடுத்து வைக்கப்பட்டிருந்தது.

வக்கீல்: இருந்தாலும் உயிர் பிரியாமல் இருக்கலாம் இல்லையா?

சாட்சி: (சலிப்படைந்து) இருந்தாலும் இருக்கலாம் எங்கேயாவது கோர்ட்டில் உங்களைப்போல வக்கீலாக.

டிஎஸ். பத்மநாபன்

*****


வக்கீல்: உங்கள் பிறந்ததேதி என்ன?

சாட்சி: ஜூலை 15

வக்கீல்: எந்த வருஷம்?

சாட்சி: எல்லா வருஷமும்

டிஎஸ். பத்மநாபன்

*****


பெண்ணின் தந்தை: தரகரே, அந்த அமெரிக்க மாப்பிள்ளையை பேசிடலாம்னு சொன்னேனே; அந்த சம்பந்தம் வேண்டாம் விட்டுடுங்க.

தரகர்: ஏன் சார்?

பெண்ணின் தந்தை: தெரியாதுங்களா... டாலர் மதிப்பு குறைஞ்சிடுச்சே.

அதிரை யூசுப்

© TamilOnline.com