நவம்பர் 2007: குறுக்கெழுத்துப் புதிர்
(அச்சில் உள்ள பிழையை திருத்திய புதிரின் வடிவம் - நெடு. 3, 4, 12)

குறுக்காக

5. கல்லையுடைக்கும் கப்பல் கவிழ்ந்து உலகம் சிறு துளி (2)
6. குளிர்ச்சியைத் தருவது துளி கடித்து இனிக்க கிராமம் சூழும் (6)
7. நியாயமற்ற அதமர் போராட்டம் (4)
8. சண்டை வைத்தால் முதலில் உடலைக் காக்கத் தேவையானது (3)
9. எதிர்ப்புற ரத்த ஓட்டம் சுழற்றி முடுக்கு (3)
11. திறமையானவனின் ஆயுதம் கத்தி முனைக்கு உறை எனக் கூறு (3)
13. குழவிக்கல்லை விழுங்கியதால் தொண்டை அடைப்பு (4)
16. படபடக்கும் கொடி சிறந்த நிலை பறக்க இயலாது (6)
17. கையைப் பயன்படுத்தாமல் சுட்டது ஆறாதென்பர் (2)

நெடுக்காக

1. பொங்கல் போன்ற தீபாவளி இறுதியைச் சூழ்ந்த அந்த நிலை (4)
2. அஹிம்சை வழியில் சென்ற ஆறு (5)
3. எருவாகிப் போ முட்டாள் (3)
4. பெரியார் சாதியைச் சேர்ந்தவர் (4)
10. குகையில் ஒளிந்த அரவிந்தரின் நடுவே தொழும் தோற்றம் (4,1)
12. போக்கற்ற துணைப்பேராசிரியரிடம் பயின்றது (4)
14. ஆனாலும் இங்கே தெய்வம் குழந்தையாக இருப்பதில்லை (4)
15. பொதுமக்களில் ஒருவன் கடைசி ஆசை சின்னவீடு (3)

புதிர் விடைகள் அடுத்த மாத (டிசம்பர் 2007) இதழில் வெளிவரும்.

வாஞ்சிநாதன்
vanchinathan@gmail.com

நியாயமானதல்ல

எஸ்.பி. சுரேஷ் என்னும் நண்பரொருவர், சிமனஸ் (Ximenes) என்ற ஆங்கிலப் புதிராளரின் குறுக்கெழுத்துப் புதிர்கள் பற்றிய கொள்கை களையும் விதி முறைகளையும் படித்து அறிந்தவர். அக்கொள்கைப்படி புதிரை எப்போதும் படிப்பவருக்கு "நியாயமாக" இருக்கும்படி அமைக்க வேண்டும். அந்த விதியை அக்டோபர் புதிரில் மீறியிருப்பதாக என்னை சுரேஷ் அன்புடன் குற்றஞ்சாட்டுகிறார். "காரம் புலவர் வால் நறுக்கிக் கெடு (2,4)" என்பதில் "கெடு" என்ற சொல் சொற்களைக் "கெடுக்க" வேண்டும் (operative for anagram) என்பதோடு இறுதி விடையின் பொருளாகவும் (கெடு = deadline) அமைத்திருந்தேன். ஒரு சொல்லை இரு காரியங்களுக்காகப் பயன்படுத்துவது சிமனஸ் கொள்கைப்படி நியாயமானதல்ல என்று சுரேஷ் சுட்டிக் காட்டுகிறார். ஆனால் பலரும் விடையைக் கண்டு பிடித்துவிட்டதால் எப்போதவாது இவ்விதியை மீறலாம் என்றிருக்கிறேன். இதில் உங்கள் கருத்து என்ன என்று கூறுங்கள்.

vanchinathan@gmail.com

நீங்கள் புதிர் மன்னரா?

குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடைகளை நவம்பர் 25-க்குள் அனுப்பும் முதல் மூன்று வாசகர்களின் பெயர்கள் 'புதிர் மன்னர்கள்' சாதனைப் பட்டியலில் இடம் பெற்று அடுத்த இதழில் வெளிவரும். விடைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thendral@tamilonline.com. நவம்பர் 25க்குப் பிறகு, விடைகளை www.tamilonline.com என்ற சுட்டியில் காணலாம்.

அக்டோபர் 2007 குறுக்கெழுத்துப் புதிர் விடைகள்

© TamilOnline.com