1. அது ஒரு மூன்று இலக்க எண். அந்த எண்ணிலிருந்து அதன் தலைகீழ் வரிசையைக் கழித்தால் வரும் விடை அதே எண்ணின் மாறு வரிசையாக அமைகிறது. அந்த எண் எது?
2. ராமுவிடம் இருக்கும் பந்துகளைப் போல் இரு மடங்கு சுரேஷ் வைத்திருக்கிறான். இருவரிடமும் உள்ள பந்துகளின் மொத்த எண்ணிக்கை 27. ராமு, சுரேஷ் ஒவ்வொருவரிடமும் உள்ள பந்துகளின் எண்ணிக்கை என்ன?
3. 212, 179, 146, 113, ... வரிசையில் அடுத்து வரும் எண் என்னவாக இருக்கும்? காரணம் யாது?
4. ஐந்து பூனைகள் ஐந்து நிமிடங்களில் ஐந்து எலிகளைப் பிடித்துத் தின்கின்றன என்றால் எவ்வளவு பூனைகள் 20 நிமிடங்களில் 20 எலிகளைப் பிடித்து உண்ணும்?
5. ஒரு கூடையில் ஆப்பிள்களும் ஆரஞ்சுப் பழங்களும் இருக்கின்றன. ஒவ்வொரு நான்கு ஆரஞ்சுப் பழத்திற்கும் ஐந்து ஆப்பிள் பழங்கள் என்ற வீதத்தில் உள்ளன. அவற்றில் 16 ஆப்பிள் பழங் களையும், 16 ஆரஞ்சுப் பழங்களையும் குழந்தைகளுக்குக் கொடுத்த பின் எஞ்சியுள்ள பழங்களைக் கணக்கிட்ட பொழுது அவை, ஒவ்வொரு 2 ஆரஞ்சுப் பழத்திற்கும் 3 ஆப்பிள்கள் வீதம் இருந்தன. முதலில் கூடையில் இருந்த மொத்த ஆப்பிள்கள், ஆரஞ்சுகள் எத்தனை?
6. ஒவ்வொன்றுக்கும் இடையே நான்கு அடி இடைவெளி இருக்குமாறு 8 செடிகள் ஒரே வரிசையில் சீராக நடப்படுகின்றன என்றால் முதல் செடிக்கும் இறுதிச் செடிக்கும் இடையே உள்ள தூரம் எத்தனை அடி?
அரவிந்தன்
கணிதப்புதிர்கள் விடைகள்1. 954-459 = 495
2. மொத்தப் பந்துகளின் எண்ணிக்கை = 27
ராமுவிடம் இருக்கும் பந்துகள் x எனில் சுரேஷிடம் இருக்கும் பந்துகள் x+x = 2x
x+2x = 27
3x = 27 எனில்
x = 9.
எனவே ராமுவிடம் 9, சுரேஷிடம் 18.
3. அடுத்து வரும் எண் = 80. வரிசை யில் உள்ள எண் ஒவ்வொன்றி லிருந்து எண் 33 ஐக் கழித்தால் அடுத்த எண் வருகிறது. எனவே 113-லிருந்து 33-ஐக் கழிக்க வருவது 80.
4. ஐந்து பூனைகள், ஐந்து எலிகளைப் பிடிக்க ஐந்து நிமிடங்கள் ஆகிறது என்றால் 20 எலிகளைப் பிடிக்கவும் 20 நிமிடங்கள் தான் ஆகும். ஆகவே ஐந்து பூனைகள் என்பதே விடையாகும்.
5. ஒவ்வொரு நான்கு ஆரஞ்சுப் பழத்திற்கும் ஐந்து ஆப்பிள் பழங்கள் வீதம் என்றால் அவற்றின் விகிதம் 4:5. அவற்றில் 16 ஆப்பிள் பழங்களும், 16 ஆரஞ்சுப் பழங்களும் குழந்தைகளுக்குக் கொடுக்கப்படுகின்றன. எனவே 16 ஆரஞ்சுப் பழங்களுக்கு 20 ஆப்பிள் பழங்கள் அமைந்திருக்கும். எஞ்சியுள்ளவை ஒவ்வொரு 2 ஆரஞ்சுப் பழத்திற்கும் 3 ஆப்பிள் பழங்கள் வீதம் அமைந்திருக்குமானால் அவற்றின் விகிதம் 2:3 ஆகும். அதாவது மீதியுள்ள ஆரஞ்சுப் பழங்களின் எண்ணிக்கை 8. ஆப்பிள் பழங்களின் எண்ணிக்கை 12. விடை: 40 ஆப்பிள், 32 ஆரஞ்சு.
6. 28 அடிகள்