இட்டலி மாவு பஜ்ஜி
தேவையான பொருட்கள்

இட்டலி மாவு - 1/2 கிண்ணம்
வெங்காயம் (நறுக்கியது) - 1/8 கிண்ணம்
பச்சைமிளகாய் (நறுக்கியது) - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
கொத்துமல்லி - சிறிதளவு
எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு

செய்முறை

எண்ணெய் நீங்கலாக அனைத்துப் பொருட்களையும் ஒன்றுசேரக் கலந்து, காய்ந்த எண்ணெயில் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு நன்கு வேகவிட்டு எடுத்து வைக்கவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com