சித்தரத்தைக் கஷாயம்
தேவையான பொருட்கள்

சித்தரத்தை - 3 பெரிய துண்டுகள்
அரிசித் திப்பிலி - 1 தேக்கரண்டி
பால் - 1/2 மேசைக்கரண்டி

செய்முறை

சித்தரத்தை, அரிசித் திப்பிலி இரண்டை யும் ஒரு சட்டி அல்லது வாணலியில் போட்டு 2 கிண்ணம் தண்ணீர் விட்டு, 1 கிண்ணமாகக் குறுகக் கொதிக்க வைக்கவும். பின்னர் வடிகட்டி, பால்விட்டுக் குடித்தால் மார்ச்சளி, தொண்டைக்கட்டு, இருமல் குறையும். அரிசித் திப்பிலியை வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்து சர்க்கரை சேர்த்துச் சாப்பிட தொண்டை கரகரப்பு, இருமல் குறையும்.

ஓமவல்லி, துளசி, வெற்றிலை வதக்கிக் கஷாயம் போட்டுக் குடித்தால் சளி, ஜலதோஷம் குறையும். தொண்டைக் கட்டும் சரியாகி விடும்.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com