தேவையான பொருட்கள்
சிறிய (அ) பெரிய சீரகம் - 1 கரண்டி வெண்ணெய் (அ) நெய் - 1 தேக்கரண்டி தேன் (அ) வெல்லம் - 1/2 தேக்கரண்டி
செய்முறை
சீரகத்தை வெறும் வாணலியில் வெடிக்க விட்டு 2 கிண்ணம் தண்ணீர் விடவும். நன்கு கொதித்துக் குறுகியதும் எடுத்து வடியவிட்டு வெண்ணெய் அல்லது நெய் விட்டுத் தேன் சேர்க்கவும். இது வயிற்றுவலி, நீர்க்கடுப்பு ஆகியவற்றுக்கு நல்லது.
முன்னாளில் பிரசவ வலி எடுத்தவுடன் இதைச் செய்து கொடுப்பார்கள்.
தங்கம் ராமசாமி |