இஞ்சிக் கஷாயம்
தேவையான பொருட்கள்

இஞ்சி (நறுக்கியது) - 1/2 கிண்ணம்
கொத்துமல்லி விதை - 2 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
எலுமிச்சம்பழம் - 1
தேன் அல்லது வெல்லம் - தேவைக்கேற்ப

செய்முறை

இஞ்சி, தனியா, சீரகம் ஆகியவற்றைப் பச்சையாய் மிக்சியில் தண்ணீர் விட்டு 2 கிண்ணம் வருகிற மாதிரி அரைத்து எடுத்துக் கொதிக்க விடவும். நன்றாகக் கொதித்ததும் இறக்கி வடிகட்டி, எலுமிச்சம் பழம் பிழிந்து, தேன் (அல்லது வெல்லம்) சேர்த்துக் குடிக்கவும்.

தலைசுற்றல், பித்தம், வயிற்றுக் கோளாறு எல்லாவற்றுக்கும் இது நல்லது. இதை இஞ்சி சொரசம் என்று சொல்வார்கள்.

நிறையச் செய்து குளிர்பதனப் பெட்டியில் வைத்துக் கொள்ளலாம். கெட்டுப் போகாது. காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com