சுக்குக் கஷாயம்
தேவையான பொருட்கள்

சுக்குப் பொடி - 1/4 கிண்ணம்
கறிவேப்பிலைக் குச்சி - 4
மிளகு - சிறிதளவு
மஞ்சள் - 1 சிறிய துண்டு
தேன் அல்லது வெல்லம் - தேவைக்கேற்ப

செய்முறை

சுக்குப்பொடி, மிளகு, கறிவேப்பிலைக் குச்சி, மஞ்சள் எல்லாவற்றையும் வெறும் வாணலியில் வதக்கி, 2 கிண்ணம் நீர் விட்டுக் கொதிக்க விடவும். அது ஒரு கிண்ணமாகக் குறுகியதும் எடுத்து வடிகட்டி, தேன் அல்லது வெல்லம் சேர்த்துக் குடிக்கவும்.

உடல் அசதி, ஜுரம், தலைவலி, பித்தம் ஆகியவற்றுக்கு நல்ல கஷாயம்.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com