ஆப்பிள் பஜ்ஜி
தேவையான பொருட்கள்

ஆப்பிள் - 1
கடலை மாவு - 1 கிண்ணம்
அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி
சோள மாவு - 1 தேக்கரண்டி
மிளகாய்ப் பொடி - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை

ஆப்பிளைத் தோல் சீவாமல் வட்டவடிவ மெல்லிய துண்டுகளாகச் சீவிக்கொள்ளவும். எண்ணெய் தவிர எல்லாப் பொருட்களையும் தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்துக்கொள்ளவும். ஒவ்வொரு வில்லையாக மாவில் தோய்த்துக்

காய்ந்த எண்ணெயில் போட்டு, இருபுறமும் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com