பிரசாந்தின் விருப்பம்
'ஸ்டார்', 'சாக்லேட்' என்று பிரசாந்துக்கு அடுத்தடுத்துப் படங்கள் வந்தாலும் எதுவும் பேர் சொல்லும்படியாக இல்லை. சுசி கணேசன் இயக்கத்தில் உருவாகி கிடப்பில் இருக்கும் 'விரும்புகிறேன்' படத்தை மலைபோல நம்பிக் கொண்டிருக்கிறார் பிரசாந்த். உண்மையில் அந்தப் படம் மிக நன்றாக வந்திருப்பதாக ஒரு பேச்சு எழுந்து அப்படியே மூழ்கிப் போய்விட்டது. மக்கள் மறந்தே போன நிலைமையில் இப்போது தூசு தட்டி எடுக்கிறார்கள். பிரசாந்தின் அப்பா தியாகராஜன் படத்தை ரிலீஸ் செய்ய மிகந்த சிரத்தை எடுத்து வருகிறார்.

தமிழ்மகன்

© TamilOnline.com