தவசி
'நரசிம்மா'வுக்குப் பிறகு விஜயகாந்த் நடித்து வரும் படம், 'தவசி'. படத்தில் விஜயகாந்துக்கு இரட்டை வேடம். இவருக்கு ஜோடியாக செளந்தர்யா, ஜெயசுதா நடிக்கிறார்கள். இவர்களுடன் நாசர், வடிவேறுலு, 'நிழல்கள்' ரவி, தியாகு, டெல்லி கணேஷ், பொன்னம்பலம், ஸ்ரீமன், ஜெகன், சிஸர் மனோகர், பிரதியூஷா, ஈஸ்வரி ராவ், செளம்யா, வடிவுக்கரசி, குயிலி, ஐஸ்வர்யா, காந்திமதி ஆகியோர் நடிக்கிறார்கள்.

விஜயகாந்த் படம் என்றால் பிரம்மாண்டம் என்று அர்த்தமாகிவிட்ட காலத்தில் இப்படத்தில் கும்பகோணம் மகாமகத்தை செட் போட்டிருக்கிறார்கள். ஏறத்தாழ 10 ஆயிரம் துணை நடிகர்கள் இதில் பங்கு பெற்றார்கள். (இந்த முறை யார் குளித்தார்கள் என்று தெரியவில்லை) 30 நடனக் கலைஞர்கள் மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, பொக்கிலி, புலியாட்டம், சிலம்பாட்டம் ஆடினர். இவற்றை 9 கேமிராக்களில் படம்பிடித்தனர்.

படத்தை தீபாவளிக்கு வெளியிட தீர்மானித்து பம்பரமாய்ப் பணியாற்றி வருகிறார்கள். (ஆனால் யார் தொப்புளில் பிடப் போகிறார்களளென்று தான் தெரியவில்லை!)

இசை: வித்யாசாகர், பாடல்கள்: பா. விஜய் - பழனிபாரதி.

சண்டைப் பயிற்சி: சூப்பர் சுப்பராயன், நடனம்: கலா - சின்னி பிரகாஷ்.

கிராபிக்ஸ்: வெங்கி, திரைக்கதை - வசனம் - டைரக்ஷன்: உதய ஷங்கர்.

தமிழ்மகன்

© TamilOnline.com