வேலை Interviewவில் சிறப்பாக நடந்து, வேலை பெற என்ன செய்ய வேண்டும்?
முன்குறிப்பு: போன இதழில், வேலைதேடும் யுக்திகளைப் பற்றிப் பார்த்தோம். இந்த இதழில் இடம் பெறும் கட்டுரையை, அதன் தொடர்ச்சியாகக் கருதலாம்.

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத கதிரவன் மின் வலைக்குள்புகுந்து, உறங்கிக் கொண்டி ருந்த வேதாளத்தை பிடித்து தோளின் மேல் தூக்கிப் போட்டுக் கொண்டு நிஜ உலகுக்கு வரத் தொடங்கினார். வேதாளம் உடனே விழித்துக் கொண்டு கேள்விக் கதையை விவரிக்கலாயிற்று:

அமெரிக்காவில், வாஷிங்டன் மாநிலத்தில் வசிக்கும் சூரசேனன், வீரசேனன் இருவரும் சமமான திறமை வாய்ந்தவர்கள் - வீரசேனன் சில விதங்களில் ஒருபடி மேல் என்று கூட கூறலாம். இருவரும் புதிதாக அமைகப்பட்ட ஒரு நிறுவனத்தில் இருந்து இரு சமமான வேலைகளுக்கு நேர்முகப் பேச்சுக்கு அழைக்கப்பட்டனர். ஆனால் சூரசேனனுக்கு மட்டுமே வேலை கிடைத்தது. வீரசேனன் நிராகரிக்கப்பட்டான். எந்தக் காரணத்தால் அப்படி நடந்திருக்கலாம்?

வேதாளம் கேள்வியை முடித்து விட்டு,

"இந்தக் கேள்விக்கு பதில் தெரிந்தும் சொல்லவில்லையென்றால், உன் web-site Nimda virus-ஆல் பாதிக்கப்பட்டு சுக்கு நூறாகச் சிதறி விடும்" என்றது. இது வழக்கமாக வரும் டயலாக் என்பதால் கதிரவன் பதட்டமின்றி பதிலைத் துவங்கினார்.

வேலை கிடைப்பது, ஒருவரின் திறன்களையோ, அனுபவத்தையோ வைத்து மட்டுமல்ல. நேர்முகத் திறனாய்வில் (Interview) எப்படி நடக்கிறார்களோ, அது மிக முக்கியம்.

Interview என்பதையே, அதாவது, நிறுவனத்துக்குச் சென்று, வேலைக்கு அமர்த்தும் குழுவினருடன் நேரில் சந்திப்பதையே, ஒரு தனிப்பட்ட கட்டமாகப் பார்க்கக் கூடாது. அதற்கு முன்பு தயாரிப்பாகவும், பின்பு தொடர்ச்சியாகவும் செய்ய வேண்டிய பலக் கட்டங்களில், அதுவும் ஒன்று. வேலை கிடைக்க வேண்டுமானால், இந்தத் தொடரில் (process) அத்தனைக் கட்டங்களையும் பழுதின்றி நடத்த வேண்டும். இப்போது அந்த கட்டங்கள் யாவை, ஒவ்வொன்றிலும் என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

1. முன் தயாரிப்பு

Interview செய்யும் நிறுவனத்தைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களுடைய website-இல் உள்ள விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும்.

வேலை எந்தக் குழுவில் உள்ளது, எந்த மாதிரி வேலை, அதன் முக்கியத்துவம் என்ன, எல்லாவற்றையும் ஆராய்ந்து அதற்கேற்ப பேசத் தயாராக இருக்க வேண்டும்.

உங்கள் அனுபவத்தில் செய்த வேலை விவரங்கள், பயின்ற தொழில்நுட்பங்கள் (technologies) எல்லாவற்றையும் ஒரு முறை ஆழ்ந்து நிறைவுபடுத்திக் கொள்வது நல்லது. அவற்றைப் பற்றி ஒரு தயக்கமும் இன்றிப் பேச முடிய வேண்டும்.

§வைலக்குத் தேவையான புது திறன்கள் ஏதாவத இருக்குமானால், அவற்றைப் பற்றியும் சிறிது மீண்டும் புரட்டிப் பார்த்துக் கொள்வது உதவியாக இருக்கும்.

Interview - வில் எந்த மாதிரி உரையாடல் நடக்கலாம். எந்த மாதிரிக் கேள்விகள் எழலாம் என்று தானே நினைத்துப் பார்த்து, அவற்றுக்குத் தக்கபடி தயார் செய்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நிறுவனமும், அங்குள்ள குழுக்களும் Interview செய்யும் முறை (style) வெவ்வேறு மாதிரி. இந்த நிறுவனம், இந்தக் குழு எப்படி நடத்துகிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தால் அதற்கேற்றபடியான மனநிலையுடன் தயாராக இருக்கலாம். அங்கு வேலை செய்பவரிடமாவது, முன்பு அங்கு Interview-வுக்கு சென்றவரிடமாவது, Recuriter- இடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

2. Interview நாளன்று

காலை உணவு அருந்தும் வழக்கம் இல்லாவிட்டாலும், interview நாள் அன்று சிறிதாவது உண்பது நல்லது. அது பொதுவாக, நீண்ட நாளாக இருக்கும். நாள் முழுவதும் நல்ல சக்தியுடன் இருக்க உதவியாக இருக்கும்.

'வெற்றிக்கு ஆடை' (dress for success) என்று கூறுவார்கள். அது interview-வுக்காகவே ஏற்பட்டிருக்குமோ? இது, இன்றைய சூழ்நிலையில் மிகவும் முக்கியம். வணிகச் சம்பந்தப்பட்ட, customer பார்க்கக் கூடிய வேலையாக இருந்தால், அதன் முக்கியத்துவம் இன்னும் பல மடங்காகிறது. பொறியியல் வேலையானால், நிறுவன பண்பாட்டின்படி மிக அதிகமாகத் தோன்றினால், jacket, tie எடுத்து விடலாம்.

தாமதமின்றி, நேரத்தில் சென்று சேர வேண்டும். Interview-விற்கே தாமதம் என்றால், சேர்ந்து விட்ட பிறகு, முடிக்க வேண்டிய வேலைகள் என்னாகும் என்ற அபிப்ரி¡யத்துக்கு உள்ளாகிவிடக் கூடாது.

ஆக மொத்தம், முதல் எண்ணம், நல்லபடியாக இருக்கும்படி செய்ய வேண்டும். First Impression is the best impression!

3. Interview நடக்கும் போது

எந்தக் கேள்வியானாலும், மனத்துக்குள் சுதாரித்துக் கொண்டு, நேராகவும், படபடப்பின்றியும் பதிலளிக்க வேண்டும்.

எதற்காவது முழுதும் பதில் தெரியாவிட்டால், முதலில் அதை ஒப்புக் கொண்டு விட்டு, தெரிந்த அளவுக்கு கூறுவதே நல்லது. தெரிவது போல் காட்டிக் கொண்டு ஆரம்பித்து விட்டு, பிறகு மாட்டிக் கொள்வது வினையாக முடியும்.

பதில் தெரியாவிட்டாலும் கூட, சில முறை interview செய்பவர்கள் முயற்சிக்கச் சொல்லுவார்கள். வேண்டுமென்றே, தெரியாத விஷயத்தைக் கேட்டு முயற்சிக்க வைப்பவர்களும் உண்டு (அடியேனும் கூடத்தான்!). காரணம், கடினமான ஒரு தொழில்நுட்பப் பிரச்சனையை தீர்க்கும் அணுகுமுறை எப்படி இருக்கிறது என்று பார்க்கத்தான்.

கேள்வி உடனே புரிந்தாலும், உங்கள் வார்த்தையிலேயே அதை மாற்றிச் சொல்லி, விளக்கக் கூடிய உப கேள்விகளைக் கேட்டு, நன்கு புரிந்து கொண்டு செய்வது நல்லது.

பதில் அளித்த பின், கேட்ட கேள்விக்கு அது சரிப்பட்டதா, திருப்தி அளித்ததா என விசாரித்துக் கொள்வதும் நல்லது.

ஒரு பிரச்சனையைத் தீர்க்க பல முறைகள் இருப்பின், ஒன்றை மட்டுமே கூறி நிறுத்தி விடாமல் மிக நல்ல சில முறைகளை மேற்போக்காகச் சொல்லி, அவற்றின் அனுகூல, பிரதிகூலங்களைக் கூறி பிறகு, அவற்றிலேயே சிறந்த ஒன்றை விவரித்தால் மிகச் சிறப்பாக இருக்கும்.

ஆவல் காட்டுங்கள்: வேலையைப் பற்றியும், நிறுவனத்தைப் பற்றியும், குழுவைப் பற்றியும் கேட்கலாம். அந்த வேலை ஏன் உங்களை ஊக்குவிக்கிறது என்று எடுத்துரைக்கலாம். சேர்ந்த பிறகு நீங்கள் ஏனோ தானோ என்றிராமல், உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். செய்ய வேண்டிய அளவுக்கே செய்து விட்டு விடாமல், மேற்கொண்டு ஆவலுடன் செய்வீர்கள் என்று அவர்கள் உணருமாறு காட்ட வேண்டும்.

நீங்கள் அந்நிறுவனத்துக்கு பல விதங்களில் ஒரு விலை மதிப்பற்ற பொக்கிஷமாகவே இருப்பீர்கள் என்று காட்ட வேண்டும். பணநெருக்கடியான நேரத்தில், நிறுவனங்கள் வேண்டுமான அத்தனை பேரையும் வைத்துக் கொள்ள முடியாது. இருப்பவர்களே, பலவிதமானக் காரியங்களை ஏற்று செயலாற்ற வேண்டிய நிர்ப்பந்தந்தான் நிறைய ஏற்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில் ஒரு வேலையை மட்டும் செய்யக் கூடியவல்களை விட சில காரியங்களைக் கவனிக்கக் கூடியவர்களுக்கு மதிப்பு அதிகம். மற்ற திறன்கள் சமமாக இருந்தால், இந்த மதிப்பு உங்களுக்குச் சாதகமாக அமையும்.

உங்கள் திறன்களை வளர்த்துக் கொண்டு, பிற்காலத்தில், நிறுவனத்துக்கு மேலும் பயன்படுவீர்கள் என்று காட்ட, அவர்களுடைய பயிற்சி (training), தொழில் வளர்ச்சி (career development) போன்றவற்றில் ஆர்வம் காட்டலாம்.

Interview -வில் பலரையும் சந்திக்க வேண்டி வரும். ஒருவர் வேண்டாம் என்று கூறினாலும் வேலை கிடைக்காது. எல்லாரிடமும் சமமாகத் திறமை காட்ட வேண்டும். தெரியாத துறையில் காட்ட வேண்டுமென்பதில்லை. ஆனால், தெரிந்தவற்றில், ஒருவரிடமும் பிரமாதமாகவும், இன்னொருவரிடம் சுமாராகவும் செய்தால் பிரச்சனை எழும். ஒவ்வொருவர் ஒரு மாதிரி குணம் என்பதால் அவரவர் போக்குக்கேற்ப, அவர்களுக்கு எப்படி, எதைப் பற்றி ஆர்வத்துடன் பேசினால் உற்சாகம் அடைவார்கள் என்று தெரிந்து கொண்டு அவ்வாறு பேச முடிந்தால் மிக ந்லலது.

உங்களுடன் வேலை செய்வதில், குழுவினருக்கு ஆர்வம் பிறக்க வேண்டும், குறைந்தபட்சம், ஆட்சேபணை இருக்கக் கூடாது. நீங்கள் தனி நபராக இல்லாமல், குழுவுடன் எப்படி ஒருங்கிணைந்து செயல்படுவீர்கள் என்று காட்ட வேண்டும். முந்தைய வேலையிலோ, கல்லூரியிலோ குழுவோடு செய்த எதைப் பற்றியாவது புகுத்தி, உதாரணம் காட்டிப் பேச வேண்டும்.

உங்களுக்கு அந்த வேலை, வெறும் வேலை மட்டும் அல்ல, ஒரு ஆழ்ந்த பற்றும் உற்சாகமும் அதில் உங்களுக்கு இருக்கிறது என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட வேண்டும். இன்றைய சூழ்நிலையில், நிறுவனங்கள் வெறும் தொழிலாளிகளை மட்டும் தேடவில்லை - தொழிலில் தங்களை ஆழ்த்திக் கொண்டு 150% தரக் கூடியவர்களைத் தேடுகிறார்கள்.

நீங்கள் சமீபத்தில் கல்லூரி முடித்து, முதல் முறையாக வேலை தேடிக் கொண்டிருந்தாலும், அனுபவங்களைப் பற்றி பேச முடியக் கூடும்; தொழில் பயிற்சி (practical training), விடுமுறையில் சில வாரங்கள் செய்த வேலை அல்லது internships, கல்லூரிப் பேராசிரியருடன் செய்த உபவேலைகள் (teaching or research assistantships) படிக்கும் போது செய்த project-கள் இவற்றை அடிப்படையாக ¨வ்ததுப் பேசலாம்.

4. பின் தொடர்ச்சி (Follow-up)

Interview-வுக்கு போய் விட்டு வந்து அம்போ என்று விட்டு விடாமல், அழைத்த மேலாளருடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் Interview அழைத்ததற்கு நன்றி கூறி, சந்திப்பின் உயற்-குறிப்புகளைப் (high lights) புகழ்ந்து ஒரு மின்கடிதம் (email) எழுதலாம். மேற்கொண்ட கேள்விகள் இருக்குமானால் மீண்டும் மின்னஞ்சலிலோ, தொலைபேசியிலோ, நேர்முகமாகவோ பேச அழைப்பு விடுக்கலாம். பொதுவாக இல்லாமல், ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி பின் தொடர முடிந்தால் இன்னும் சிறப்பு.

5. Reference

பொதுவாக, இந்த நிலைக்கு வந்து விட்டால் பாராட்டுக்கள் உரித்ததாகும்!

Interview சரியாகப் போகாவிட்டால், References கேட்பது வழக்கமில்லை. சில நிறுவனத்தார் எதற்கும் இருக்கட்டும் என்று, முன் கூட்டியே கேட்பார்கள், ஆனால் பெரும்பாலும் அப்படி செய்வதில்லை.

Resume-விலோ, வேலை விண்ணப்பத்திலோ, References விவரம் போடக் கூடாது. ஏனெனில், யார் யார் நிலை எப்போது எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. வேண்டும் போது விவரம் கொடுப்பதாகப் போட வேண்டும், அல்லது, முழுதாக அந்த பகுதியையே எடுத்து விடுவது நலம்.

மேலும், ஒவ்வொரு வேலைவாய்ப்புக்கும், அதற்குத் தகுந்த Reference கொடுக்க முடிந்தால் சிறப்பு. உதாராணமாக, ஒருவர் ஒரு நிறுவனத்தில் மேனேஜர் வேலைக்கும், இன்னொரு நிறுவனத்தில் உயர்நிலை பொறியியலாளர் (engineer) இடத்துக்கும் முயன்றால், இரண்டுக்கும் அவர்கள் விசாரித்துத் தெரிந்து கொள்ள விரும்பும் விஷயம் வெவ்வேறு.

மேனேஜர் வேலையாக இருந்தால், முன்னாள் உயர்நிலை மேனேஜர் மற்றும் முன்பு உங்கள் கீழ் பணியாற்றியவர்கள் நல்ல Reference கொடுக்க முடியும்.

தனி நபர் வேலையாக இருந்தால் முன்னாள் மேனேஜர் மற்றும், உங்கள் திரன் தெரிந்த உடன் பணியாற்றியவர்கள் பெயர் கொடுக்க வேண்டும்.

முன் அனுபவம் இல்லாவிட்டால், பேராசிரியர்கள், அல்லது கூடப் படித்து தற்போது வேலையில் இருக்கும் நண்பர்கள் விவரம் கொடுக்கலாம்.

6. பேச்சு வார்த்தை (Negotiatioins)

Interview நடக்கும் போது, சம்பள விஷயமாக யார் என்ன கேட்டாலும் பிடி கொடுத்து பேசி விடக்கூடாது. மேனேஜரிடம் மட்டும் முன்னாள் வேலையில் கிடைத்த சம்பளம் என்ன என்று கூறலாம். ஆனாலும் எதிர்பார்ப்பு என்ன என்று ஒரு தொகையைச் சொல்லவே கூடாது. அதைப் பற்றிப் பிறகு பேசிக் கொள்ளலாம் என்றும், அதை நீங்கள் ஒரு கடினமான விஷயமாகக் கருதவில்லை என்றும் சொல்லி, விட்டு விட வேண்டும். நீங்கள் சொல்லும் தொகையால் அவர்கள் உங்களை உடனே நிராகரித்து விடக் கூடும்.

சிறுதொகை பற்றி பேரம் பேசி இழுத்தடிக்கக் கூடாது. தற்போதைய நிலவரத்துக்குத் தக்கபடி இருக்கிறதா எனப் பார்த்து, அவ்வளவுக்கு அருகில் இருந்தால் சரி.

சிறிது சிறிதாகப் பல முறை வேறு வேறு சங்கதிகளைக் கேட்கக் கூடாது. Silver Bullet என்பார்கள் - அதாவது, ஒன்றிரண்டு அதி முக்கியமானவற்றைப் பற்றி மட்டுமே கேட்க வேண்டும்.

http://www.salary.com என்னும் மின்வலைத் தளம் இதைப் பற்றி நல்ல யுக்திகள் கொடுக்கிறது. அங்கு, உங்கள் சம்பள மதிப்பு எவ்வளவு என்று மதிப்பிட்டும் பார்க்கலாம்.

நிச்சயமாகத் தவிர்க்க வேண்டியவை:

"ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்" என்று ஒளவையார் சொன்னது போல், Interview விஷயத்திலும் சில ''வேண்டாம்'' சங்கதிகள் உண்டு.

தாமதமாகச் செல்ல வேண்டாம்.

மிகவும் informat- ஆக, குறுநிஜார் போன்ற உடைகள் போட வேண்டாம்.

பட படப்புடன் பேச வேண்டாம்.

கருத்து வேறுபாடு இருந்தாலும், பெருத்த விவாதங்களில் இறங்க வேண்டாம்.

முன் வேலையைப் பற்றியோ, முன் நிறுவனத்தைப் பற்றியோ இழிவாகப் பேச வேண்டாம்.

சம்பளம் விஷயம் பேச வேண்டாம்.

இப்படி பொதுவான கருத்தைக் கூறி முடித்த கதிரவன், வேதாளம் எழுப்பிய குறித்த கேள்விக்குத் திரும்பினார் :

"Interview-வில் வெற்றி பெறுவதில் இவ்வளவு நுணுக்கங்கள் இருப்பதால், அவரவர் திறனை மட்டும் வைத்தே வேலை கிடைத்து விடும் என்று சொல்ல முடியாது. இன்று எழுப்பப்பட்ட கேள்வியில், சூரசேனனை விட வீரசேனன் திறமை வாய்ந்தவனாக இருப்பினும், interview-வில் சூரசேனனே இன்னும் நன்கு நடந்து கொண்டததால் தான் அவனுக்கு மட்டும் வேலை கிடைத்திருக்க வேண்டும்."

இந்த சரியான பதிலால் கதிரவனின் மெளனம் கலையவே, வேதாளம் அவர் தோள் மேலிருந்துத் தாவி, மீண்டும் மின் வலைக்குள் குதித்து மறைந்து விட்டது!

இறுதியாக, அறிவாளி ஒருவர் எனக்கனுப்பிய ஒரு அற்புத மணியுடன் முடிக்கிறேன்:

''சிலர் நிராகரிப்பையே நினைத்துத் தயங்கி, சரியாக செயல்படாமல், தோல்வியடைந்து விடுகிறார்கள். மேலாளர்களின் பொறுப்பு சிறந்தவர்களைத் தேர்ந்தெடுப்பது. எந்த மேலாளருக்கும் எத்தனைப் பேரை நிராகரிக்கிறார்கள் என்பதை வைத்து பரிசு கொடுப்பதில்லை. ஏற்கப்படுவதும், நிராகரிக்கப்படுவதும் உங்கள் கையில் தான்!''

நல்ல புத்திமதி! இதை மனத்தில் வைத்துக் கொண்டால், எவ்வித தயக்கமுமின்றி, சிறப்பாகச் சாதிக்கலாம்.

சந்தியுங்கள் சோதனையை! ஆற்றுங்கள் சாதனையை!

Interview-வுக்கு போக இருக்கும் அன்பர்களுக்கு, பிரமிக்கும்படி செய்து, வேலை உடனே கிடைக்க என் ஆழ்ந்த ஆசிகள்.

கீழ்க்கண்ட websites நேர்முகத் தேர்வுக்குச் செல்பவர்களுக்கு மிகவும் பயன்படக்கூடியவை:

http://www.job-interview.net
http://www.careerbuilder.com
http://www.salary.com
http://www.careercity.com
http://www.collegegrad.com

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com