குறுக்கெழுத்தில் இரண்டு வகை. ஒன்று நேரடியாக விடையை விளக்குவது, ஆங்கிலத்தில் இதற்கு Quick Clues என்று கூறுவார்கள். மற்றது, ஆளைக் குழப்பி திசை திருப்பி வெவ்வேறு கோணங்களில் தேட வைக்கும் வகை, ஆங்கிலத்தில் Cryptic Clues என்று கூறுகிறார்கள்.
ஆங்கிலத்தில் சுமார் எண்பது வருடங்களாக நன்கு வளர்ச்சியடைந்த பாணி இங்கு கையாளப்பட்டுள்ளது. ஒரு வார்த்தையை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து அக்குக்கு ஒரு அர்த்தம் ஆணிக்கு ஒரு அர்த்தம் ஆனால் மொத்தத்திற்கு வேறு அர்த்தம் என்ற முறையில் அமைப்பது இதன் சிறப்பு. (அது சரி, 'அக்கு' என்றால் என்ன? என்று யாருக்காவது தெரிந்தால் எனக்கு சொல்லுங்களேன்!)
குறுக்காக
2. உயிருக்கு அப்பாற்பட்டது மாடு காட்டு விலங்குடன் சேரும் (3) 5. புனிதமானவர் தலைமையுடன் காப்பாற்று மாற்றம் வரும் (4) 6. வான் நடுவே திரும்பி காவு கொடுக்க இளைஞன் (4) 7. கைகூப்பிச் சிவனுக்கும் பிட்டு உள்ளது (5) 9. உள்ளேயேதுமின்றித் துயரமாய் அனுபவி (2) 10. பலருக்குத் தந்தையான ஒருவருக்குச் செல்லப்பெயர் (2) 12. பெரும்புலவன் பல் பொருத்திப் பார்ப்பது தவறான கண்ணோட்டமா? (5) 14. அப்படித்தானே இல்லை வா (4) 15. மணம் கமகமக்க ஆரம்பிக்க எழுதப்பட்டுள்ளது (4) 16. அழகி திரும்ப அவள் வால் பிடித்துக் கூட்டம் (3)
நெடுக்காக
1. அவ்விடம் ரங்கனாதன் தலையிட கண்டுகளிக்கப் பலர் கூடுவர்! (4) 2. ஒரு கண்டம் முழுதும் வராதிருக்க வாழ்த்து (2) 3. பெரிய மாற்றத்துடன் வால் தட்டு, உணவகத்தில் பணம் கொடுப்பதிற்குப் பதிலாகச் செய்வவது (6) 4. விதைக்குள் பழுக்கத் தொடங்கியது தற்செயல் (4) 8. துண்டு போடத் தூண்டுபவன் (6) 11. மகள் கடைசியில் பிறப்பு மேளத்துடன் (4) 13. வழி பிரசவத்தை நெருங்கும் மாதம் (4) 15. கவிஞர்கள் நோக்கில் பெண்ணிடம் வில்லுக்கருகில் மற்றொரு ஆயுதம் (2)
வாஞ்சிநாதன் vanchi@chennaionline.com
குறுக்கெழுத்துப்புதிர் விடைகள்
குறுக்காக: 2. ஆன்மா 5. புரட்சி 6. வாலிபன் 7. கும்பிட்டு 9. துய் 10. பாபு 12. விகல்பமா 14. அல்லவா 15. வாசகம் 16. திரள் நெடுக்காக: 1. அரங்கு 2. ஆசி 3. மாவாட்டுதல் 4. விபத்து 8. பிரிவினைவாதி 11. புதல்வி 13. மார்கழி 15. வாள் |