மைதா முறுக்கு
தேவையான பொருட்கள்

மைதா மாவு - 1 கிண்ணம்
சீரகம் - 1 தேக்கரண்டி
வெண்ணெய் அல்லது நெய் - 3 தேக்கரண்டி
பெருங்காயம் பவுடர் - ஒரு துளி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - போதுமான அளவு

செய்முறை

மைதா மாவை மெல்லிய துணியில் கட்டி 7 - 8 நிமிடஙகளுக்கு ஆவியில் வைக்கவும். (இட்லி குக்கரில் வைக்கலாம்.)

பின்னர் அதனை உடனடியாக சல்லடையில் கொட்டி சலித்தெடுக்கவும்.

இந்த மாவுடன் உப்பு, சீரகம், வெண்ணெய், பெருங்காயத்தூள் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.

முறுக்குக் குழாயில் மாவைப் போட்டு வட்டமாய்ப் பிழிந்து, எண்ணெயில் விட்டு நன்கு சிவக்குமாறு பொரித்தெடுக்கவும். எண்ணெய் வடிந்த பின் காற்றுப்புகா பாத்திரத்தில் சேமிக்கவும். முறுக்கு காரமாக வேண்டுமெனில், மாவு பிசையும் போது ஒரு தேக்கரண்டி மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com