தேவையான பொருட்கள்
பச்சரிசி மாவு - 2 கிண்ணம் உளுந்தம் பருப்பு - 200 கிராம் பெருங்காயம் பவுர் - 1/4 தேக்கரண்டி தேங்காய் துருவல் - 1/4 கிண்ணம் மிளகாய்த் தூள் - 1 டேபிள்ஸ்பூன் (அல்லது தேவையான அளவு) கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன் பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
கடலைப் பருப்பை தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
அரிசி மாவு, உளுந்தம் பருப்பு மாவு, ஊறவைத்த கடலைப் பருப்பு, தேங்காய் துருவல், பெருங்காயம் பவுடர், வெண்ணெய், உப்பு அனைத்தையும் நன்றாகக் கலக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய்யை சூடாக்கவும். கலந்து வைத்த மாவில் சிறு உருண்டை எடுத்து வட்ட வடிவில் தட்டி, சூடான எண்ணெய்யில் விட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். எண்ணெய் வடிந்த பின் காற்றுப்புகா பாத்திரத்தில் சேமிக்கவும்.
சரஸ்வதி தியாகராஜன் |