தேவையான பொருட்கள்
முந்திரி - 3/4 கிண்ணம் பால் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன் அல்லது 1/2 கிண்ணம் அடர்த்தியான பால் சர்க்கரை - 1 1/2 கிண்ணம் நெய் - 1/3 கப்
செய்முறை
அரை கிண்ணம் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள்.
தீயிலிருந்து இறக்கி, கொதிக்கும் தண்ணீரில் முந்திரிப் பருப்புகளைப் போட்டு மூடி வைக்கவும். ஒரு மணி நேரம் ஊறிய பிறகு முந்திரிப் பருப்புகளுடன் பால் பவுடர் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். அரைக்கும் போது சிறதளவு தண்ணீர் அல்லது பால் சேர்த்துக் கொள்ளலாம்.
கனத்த அடிப்பகுதி உள்ள பாத்திரத்தில், சிறிதளவு தண்ணீரில் சர்க்கரையை சேர்த்து சூடாக்கவும். பாகு கம்பிப் பதத்தில் வரும்போது அரைத்து வைத்த முந்திரிப் பருப்பை சேர்த்து லேசாகக் கிளறவும். அவ்வப்போது சிறிதளவு நெய் சேர்த்துக் கொள்ளலாம்.
பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை கிளறிக் கொண்டே இருங்கள். இந்தப் பதத்தில் நெய் தடவிய தட்டுக்கு மாற்றிக் கொள்ளுங்கள். மிதமான சூட்டில், தேவையான வடிவத்தில் துண்டாக்கிக் கொள்ளுங்கள்.
சரஸ்வதி தியாகராஜன் |