வெண்டைக்காய் பஜ்ஜி
தேவையான பொருட்கள்

வெண்டைக்காய் - 10
கடலை மாவு - 1 கிண்ணம்
சோள மாவு - 1 தேக்கரண்டி
மைதா மாவு - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
மிளகாய்ப் பொடி - தேவைக்கேற்ப
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு

செய்முறை

வெண்டைக்காயின் நுனியையும் அடியையும் சிறிது வெட்டி எறியவும். நீளவாக்கில் மேலிருந்து கீழாகச் சிறிது தூரத்திற்குக் கீறவும். எண்ணெய் தவிர எல்லாப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து இட்டலி மாவுப் பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும். வெண்டைக்காயை மாவில் தோய்த்து, காய்ந்த எண்ணெயில் போட்டு வேகவிட்டுச் சிவந்தபின் எடுக்கவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com