வருண் சிவக்குமார் கர்நாடக இசை அரங்கேற்றம்
ஆகஸ்டு 25, 2007 அன்று கலி·போர்னியா சான்டா கிளாரா உயர்நிலைப் பள்ளி ப்ரூயின்ஸ் கலையரங்கில் ஸ்ரீராம லலித கலா மந்திர் நுண்கலைப் பள்ளி மாணவன் வருண் சிவக்குமாரின் கர்நாடக இசை அரங்கேற்றம் நடைபெற்றது. சான் ·ப்ரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் புகழ்பெற்று விளங்கும் குரு ஜெயஸ்ரீ வரதராஜன் அவர்களிடம் இசை பயின்ற வருணின் இந்த அரங்கேற்றத்தில் ரங்கஸ்ரீ வரதராஜன் வயலினும் கார்த்திக் கோபால்ரத்னம் மிருதங்கமும் பக்கம் வாசித்தனர். 18 வயதான வருணின் இந்த இரண்டரை மணி நேர அரங்கேற்றத்தை 450-க்கும் மேற்பட்டோர் கேட்டு ரசித்தனர்.

அரங்கேற்றத்தில் வருண் புரந்தரதாசர், தியாகராஜர், பாபநாசம் சிவன், முத்தையா பாகவதர் முதலியோர் இயற்றிய பல பாடல்களை தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் திறம்படப் பாடினார். நிகழ்ச்சியின் முக்கியப் பாடல்கள் பந்துவரளி, ஆபோகி ராகங்களில் அமைந் திருந்தன. வருண் நாட்டை ராகத்தில் பாடிய 'ஜகதாநந்தகாரகா', கல்யாண வசந்தா ராகத்தில் பாடிய 'இன்னுதய பாரதே' பாடல் களை பாராட்டத் தக்கனவாக இருந்தன.

ஐந்தே ஆண்டுகளில் கர்நாடக இசையை அரங்கேற்றம் செய்யும் அளவுக்குப் பயின்றுள்ள வருணின் பயிற்சியும் உழைப்பும் அபாரம்.

கந்தசாமி பழனிசாமி

© TamilOnline.com