வடகலிபோர்னியா தமிழர் அமைப்பின் கலைவிழா
வடகலிபோர்னியா தமிழர் அமைப்பின் (Tamils of Northern California-TNC) வருடாந்திரக் கலைவிழா அக்டோபர் 27 அன்று மாலை 4.30 மணிக்கு சான் ஹோசே CET அரங்கில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் சிறுவர்கள், இளைஞர்கள், பெரியோர்கள் பங்கேற்கும் இசை, நடனம், நாடகம் போன்ற பலதரப்பட்ட தமிழ்ப் பண்பாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெறும். முதல் பாகத்தில் இசை, நடனம், நாடகம் ஆகியவையும் இரவு உணவு இடை வேளைக்குப் பின் ராகலயா இசைக்குழுவினர் வழங்கும் 'பூத்தூவும் மேகம்' இன்னிசை நிகழ்ச்சியும் இடம்பெறவுள்ளன.

மேலும் விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள:
babu@babuniranjan.com
shivaswaminathan2003@yahoo.com

சுகி சிவா

© TamilOnline.com