நாடெங்கிலும் உள்ள சிறைச்சாலைகளில் முக்கியமானதும் பிரபலமானதும் தில்லியில் உள்ள திஹார் சிறைச்சாலை. அங்கு கைதிகள் கூரையில் தொங்கும் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்வது தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளது. அதனைத் தடுக்கும் பொருட்டு, சிறைச்சாலையில் நவீன வசதிகளை மேற்கொள்ள இருக்கிறார்கள். குறிப்பாக மின்விசிறிகளை முழுவதுமாக அகற்றிவிட்டு, அனைத்து அறைகளையும் குளிர்சாதன அறைகளாக மாற்றத் திட்ட மிட்டுள்ளனர். இதற்காகத் தனி அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள், அவர்களின் பொறுப்பில் அனைத்துக் கட்டுப்பாடுகளும் இருக்கும் என்று சிறைச்சாலை அதிகாரி சுனில் குப்தா தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் 'அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் இதுபோன்ற குளிர்சாதன வசதி கொண்ட சிறைச்சாலைகள் உண்டு. ஆனால் இந்தியா வைப் பொறுத்தவரை இதுதான் முதலாவதாக இருக்கும்' என்று குறிப்பிட்டிருக்கிறார். நாடெங்கிலுமுள்ள கைதிகள் ஏ.சி. கேட்டுப் போராட்டம் நடத்தும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
அரவிந்த் |