பள்ளிகளில் செல்பேசிக்குத் தடை
விஞ்ஞான வளர்ச்சியினாலும் நவீன கருவிகளினாலும் பலன்கள் பெருகிக் கொண்டே இருந்தாலும், பாதகங்களும் இல்லாமல் இல்லை. குறிப்பாக கேமரா செல்·போன்களால் பாலியல் சார்ந்த பல்வேறு பிரச்னைகள் அதிகரித்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு செல் போன்கள் விற்பனை செய்யக் கூடாது என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது கர்நாடக அரசு. குழந்தைகள் செல்·போன்களைப் பயன்படுத்துவதன் மூலம் மூளை பாதிப்பு, புற்றுநோய், மன உளைச்சல் போன்றவை ஏற்படுகின்றன என்றும், அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அவற்றை உபயோகிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள தாகவும் அரசு கூறுகிறது. மேலும், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இது விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அது அறிவுறுத்துகிறது. ஆனால் செல்·போன் பயன்படுத்துவதால் இத்தகைய பாதிப்புகள் நிகழ வாய்ப்பு உள்ளது என்பதற்கு ஆராய்ச்சிபூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் செல்போன் பயன்படுத்தத் தடைவிதிப்பது குறித்து விரைவில் முதல்வருடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

அரவிந்த்

© TamilOnline.com