அழகிய தமிழ் மகன் விஜய்
தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த் சுவாமிநாதன்

விஜய், ஸ்ரேயா, நமீதா நடிக்க அப்பச்சனின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வருகிறது 'அழகிய தமிழ் மகன்'. படத்தில் இளமைத் துள்ளலுடன் நடித்திருக்கும் விஜய், இந்தப் படத்துக்காக சண்டைக் காட்சிகளிலும், நடனங்களிலும் தனிக் கவனம் செலுத்தியிருக்கிறார். நமீதாவுடனான காட்சிகள் படத்தில் சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளனவாம். தீபாவளிக்கு வருகிறான் அழகிய தமிழ் மகன்.

விஜயின் கல்லூரி நண்பரும், மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி தயாரிக்கும் 'குருவி' என்னும் புதிய படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார் விஜய். படத்தை இயக்குவது 'கில்லி' புகழ் தரணி. விஜய்க்கு இணையாக அஸின், நயன்தாரா, வித்யா பாலன் எனப் பலர் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக ஒப்பந்தமாகி இருப்பவர் விஜயின் வெற்றி ஜோடியான த்ரிஷா.

தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த் சுவாமிநாதன்

© TamilOnline.com