கமல், ரஜினி சேர்ந்து நடிக்கும் படம்
தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த் சுவாமிநாதன்

பதினாறு வயதினிலே தொடங்கிப் பல படங்களில் நடித்து சாதனை படைத்த ரஜினியும் கமலும் காலச் சூழல்களால் பின்னர் இணைந்து நடிக்க முடியாமல் போனது. இருவரும் இருவேறு துருவங்களாய் தமக்கென தனிப்பாதை வகுத்து வெற்றி நடை போட, அதுவே அவர்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளங்களை உருவாக்கியது. தற்போது மீண்டும் இணைந்து நடிக்க இந்த ஜோடி முடிவெடுத்துள்ளது. மணிரத்னம் இயக்கப் போகும் இந்தப் படத்தைத் தயாரிப்பது கமல் என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த் சுவாமிநாதன்

© TamilOnline.com