தொகுப்பு:கேடிஸ்ரீ, அரவிந்த் சுவாமிநாதன்
கடந்த மாதம் தமிழ் திரைப்பட உலகின் நாயகர்கள் இருவரின் திருமணம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. கடந்த சில மாதங்களாகப் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த ஸ்ரீகாந்த்-வந்தனா விவகாரம் கடைசியில் திருமணத்தின் மூலம் சுமுகமாக முடிந்தது. சென்னையில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நெருங்கிய குடும்பத்தார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
'சித்திரம் பேசுதடி' படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் அடியெடுத்து வைத்த நரேனுக்கு அக்டோபர் மாதம் சென்னையில் திருமணம் நடைபெற்றது. காதல் மனைவி மற்றும் பெற்றோர்களுடன் சென்னைக்கே குடிபெயர்ந்து விட்டார்.
தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த் சுவாமிநாதன் |