ஐந்து வேடங்களில் விக்ரம்
தொகுப்பு:கேடிஸ்ரீ, அரவிந்த் சுவாமிநாதன்

கலைப்புலி எஸ். தாணு செலவுகளைப் பற்றி அஞ்சாமல் படம் எடுக்கக் கூடியவர். கமலை வைத்து இவர் எடுத்த 'ஆளவந்தான்' போன்ற படங்கள் இதற்கு நல்ல உதாரணம். இவர் தற்போது விக்ரம், ஸ்ரேயா நடிக்க 'கந்தசாமி' என்ற படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்தையும் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பிரமாண்டமாக உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார்.

விவேக், ரகுவரன் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்கும் இந்தப் படத்தை சுசி. கணேசன் இயக்குகிறார். படத்தின் முக்கியமான விஷயம் விக்ரம் ஐந்து வேடங்களில் நடிப்பது தான். அதில் ஒன்று பெண் வேடம்!

தொகுப்பு:கேடிஸ்ரீ, அரவிந்த் சுவாமிநாதன்

© TamilOnline.com