1. ஒரு மரக்கிளையில் சில கிளிகளும் மைனாக்களும் அமர்ந்திருந்தன. கிளி களின் எண்ணிக்கை மைனாக்களை விட 20 அதிகமாக இருந்தது. சற்று நேரத்தில் 10 மைனாக்களும், 10 கிளிகளும் அதே மரக்கிளையில் வந்து அமர்ந்தன. தற்போது கிளிகளின் எண்ணிக்கை மைனாக்களின் எண்ணிக்கையைப் போல இரு மடங்கு ஆகிவிட்டது என்றால் முதலில் இருந்த கிளிகள் எத்தனை, மைனாக்கள் எத்தனை?
2. சோமுவின் வயது ராமுவின் வயதை விட 9 அதிகம். சோமு வயதின் இலக்கங் களைக் கூட்டினால் 9 வருகிறது. ராமு வயதின் இலக்கங்களைக் கூட்டினாலும் 9 தான் வருகிறது. ராமு, சோமு வயதின் முதல் இலக்கங்களைக் கூட்டினாலும், இறுதி இலக்கங்களைக் கூட்டினாலும் 9 தான் வருகிறது. அப்படியானால் ராமு, சோமுவின் வயது என்னென்ன?
3. சங்கர் மற்றும் மணியின் எடை தற்போது 8:9 என்ற விகிதத்தில் உள்ளது. அதுவே சென்ற வருடம் 9:10 என்ற விகிதத்தில் இருந்தது. சங்கரின் எடை சென்ற வருடத்தை விட 4 கிலோ கூடியுள்ளது. மணியின் எடையோ சென்ற வருடத்தை விட 5 கிலோ கூடியுள்ளது என்றால் அவர்களின் முந்தைய எடை எவ்வளவு?
4. இரண்டு கூடைகளில் வாழைப்பழங்கள் இருந்தன. முதல் கூடையில் இருக்கும் பழங்களை விட இரண்டாவது கூடையில் மூன்று பழங்கள் குறைவாக இருந்தன. இரண்டாவது கூடையில் இருந்த பழங்களை விடக் கால்பங்கு அதிகமாக முதல் கூடையில் பழங்கள் இருந்தன என்றால் இரண்டு கூடைகளிலும் இருந்த பழங்களின் எண்ணிக்கை என்ன?
5. ஒரு வண்டியில் 18 பெரியவர்களோ அல்லது 30 குழந்தைகள் மட்டுமோ ஏறிக் கொள்ள முடியும். அந்த வண்டியில் தற்போது 12 பெரியவர்கள் ஏறி இருக்கிறார்கள் என்றால், மீதி எவ்வளவு குழந்தைகளை ஏற்றிக்கொள்ள முடியும்?
அரவிந்த்
கணிதப்புதிர்கள் விடைகள்1. முதலில் மரத்தில் அமர்ந்திருந்த மைனாக்களின் எண்ணிக்கை 10
மைனாக்களை விட கிளிகளின் எண்ணிக்கை 20 கூடுதல்.
ஆகவே கிளிகளின் எண்ணிக்கை 10 + 20 = 30.
கூடுதலாக 10 கிளிகளும் 10 மைனாக்களும் வந்து அமரவே...
மைனாக்களை விட கிளிகளின் எண்ணிக்கை இரு மடங்கு கூடுதல்.
மைனாக்கள் 10 + 10 = 20.
கிளிகள் 30 + 10 = 40
ஆக மொத்தம் கிளிகள் 40, மைனாக்கள் 20.
2. ராமுவின் வயது 45. (4 + 5 = 9)
சோமுவின் வயது, ராமுவின் வயதை விட 9 அதிகம்.
எனவே சோமுவின் வயது 45 + 9 = 54. (5 + 4 = 9)
3. சங்கரின் எடை: 40
மணியின் எடை: 45
விகிதம்: 8:9
நான்கு வருடங்களுக்கு முன் சங்கரின் எடை (40-4) = 36.
நான்கு வருடங்களுக்கு முன் மணியின் எடை (45-5) = 40.
விகிதம்: 9:10
4. முதல் கூடையில் இருந்த பழங்களின் எண்ணிக்கை = X = 12
இரண்டாவது கூடையில் இருந்த பழங்களின் எண்ணிக்கை =
Y = X-3 = 12-3 = 9
இரண்டாவது கூடையில் இருக்கும் பழங்களின் எண்ணிக்கையை விட முதல் கூடையில் இருக்கும் பழங் களின் எண்ணிக்கை கால் பங்கு அதிகம் (9+3=12) ஆக..
முதல் கூடையில் இருந்த பழங்கள் 12
இரண்டாவது கூடைப் பழங்கள் 9
5. 18 பெரியவர்களுக்குப் பதிலாக 30 குழந்தைகள் ஏறிக் கொள்ளலாம் என்றால் 12 பெரியவர்களுடன் 10 குழந்தைகள் ஏறிக் கொள்ளலாம்.