குடைமிளகாய் ரசவாங்கி
தேவையான பொருட்கள்

குடைமிளகாய் - 6
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
கொத்துமல்லி விதை - 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 6
பெருங்காயம் - சிறிதளவு
புளிக்கரைசல் - 1/2 கிண்ணம்
துவரம் பருப்பு - 1/2 கிண்ணம்
மஞ்சள்தூள் - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - தேவைக்கேற்ப
எண்ணெய் - தாளிக்க

செய்முறை

துவரம்பருப்பைக் குழைய வேகவிட்டுக் கொள்ளவும். குடைமிளகாயை நறுக்கிப் புளிக்கரைசல், உப்பு, மஞ்சள் தூள் போட்டு வேகவிடவும்.

கொத்துமல்லி விதை, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை எண்ணெய் விட்டு வறுத்துத் தேங்காயுடன் அரைத்துக் கொள்ளவும். இதை வேகவிட்ட குடைமிளகாய், துவரம் பருப்பு இவற்றுடன் கொட்டிக் கொதிக்க விடவும். பிறகு இறக்கி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்துச் சாப்பிடவும்.

இது கத்திரிக்காய் ரசவாங்கி போல் மிகவும் சுவையாய் இருக்கும்.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com