குடைமிளகாய் தயாரிப்புகள்
குடைமிளகாய் புலவு

தேவையான பொருட்கள்

குடைமிளகாய் - 5
அரிசி - 2 கிண்ணம்
கொத்துமல்லி விதை - 2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 8
பச்சை மிளகாய் - 3
முந்திரிப் பருப்பு - 8
லவங்கப்பட்டை - சிறிதளவு
ஏலக்காய் - 8
கிராம்பு - 2
பிரிஞ்சி இலை - சிறிதளவு
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
நெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை

அரிசியை நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும். பட்டை இலை, ஏலக்காய், கிராம்பு இவற்றையும் வறுத்து கொள்ளவும்.

குடைமிளகாயை நீளவாட்டில் வகிர்ந்து, அதைச் சிறிது நெய் அல்லது எண்ணெய் விட்டு வதக்கவும். பின்பு கடலைப்பருப்பு, கொத்துமல்லி விதை,

மிளகாய் வற்றல், எண்ணெய் விட்டு வறுத்துப் பொடி செய்து வைக்கவும். பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல் தாளித்துப் பச்சை மிளகாயையும் ஒரு பிரட்டுப் பிரட்டி அரிசியுடன் குடைமிளகாய், பொடி செய்த மாசலா, ஏலக்காய், கிராம்பு பட்டை இலை இவற்றுடன் உப்புப் போட்டு குக்கரில் தண்ணீர் வேண்டிய அளவு விட்டு மூடி வேகவிடவும். மூன்று விசில் விட்டுப் பிறகு எடுக்கவும். இதற்குப் பிறகு முந்திரி வறுத்துப் போட்டு, கறிவேப்பிலை போடவும். நன்கு கிளறிப் பரிமாறவும்.

வெவ்வேறு நிறக் குடைமிளகாய்களில் செய்தால் பார்க்க வண்ணமயமாக இருக்கும். தனியாகச் சாதம் வடித்து, எல்லாவற்றையும் வதக்கிப் போட்டும் கலக்கலாம். ஏலக்காய் கிராம்புக்குப் பதில் மசாலா தூள் போட்டும் செய்யலாம்.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com