வண்ண வண்ண கூடாரங்களில் காய்கறிகளின் அணிவகுப்பு
வாரம் இருமுறை கூடும், 'Farmers Market' பச்சைக் காய்கறிகளை விரும்பும் உள்ளங்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

அமெரிக்காவின் முக்கிய நகரங்களிலும், ஆசிய மக்கள் வசிக்கும் பெரும்பான்மையான இடங்களிலும், இது போல, 'Farmers Market' உண்டு.

காதில் கேட்வை :

* ''இங்க வாங்கறதுல நமக்கும் ஒரு திருப்தி. நாமே தோட்டத்திலிருந்து பறிச்சாப்பல ஒரு பரவசம்''.

* ''ஏண்டா, அப்படியே நம்ம ஊர் கொத்தவால் சாவடி மாதிரியே இருக்குல்ல!'' ஆமாம், கொஞ்சம் பேரம் பேசியும் வாங்கலாம்மா''.

* ''என்ன ஜெயா, போன வாரம் வராம பண்ணிட்ட. பச்சை சுண்டைக்காய் கிடைச்சுதே!''

* ''எப்ப, ஊர்லேர்ந்து வந்தீங்க. சென்னைல அப்பா, அம்மா எல்லாரும் செளக்கியமா. அப்புறமா வீட்டுக்கு வாங்க! ''

* ''என்ன கமலா.... இப்பல்லாம் வாரம் ஒரு முறை வந்து, காய்கறி இங்க தான் வாங்கறியா...'' ''ஆமா தீபா. கடையில எல்லாம், காய்கறிகள், பழங்கள் கெடாம இருக்க 'wax' கோட்டிங் கொடுக்கறாங்களாமே. அதனால காய்கறிகள்ல இருக்கற 'Freshness' போயிட வாய்ப்பிருக்கு. இங்க அப்படி எல்லாம் இல்லையே.

© TamilOnline.com