நல்ல புத்தகங்கள் - நல்ல நண்பர்கள் !
இந்தியாவிலுள்ள குழந்தைகளுக்கு நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்தி அளிக்கும் திட்டத்தை அமெரிக்காவிலுள்ள மாணவர் அமைப்பு 'FRIENDS IN DEED' என்னும் அமைப்பு கையிலெடுத்திருக்கிறது.

புவனா ஷர்மா மற்றும் பிரியா தல்ரேஜா இருவரும் சேர்ந்து இந்த அமைப்பை நிர்வகித்து வருகிறார்கள். இந்த அமைப்பின் தோற்றம் பற்றிக் குறிப்பிடும் புவனா ஷர்மா, இந்தியாவிலுள்ள குழந்தைகளுக்கான நூலகங்களின் பரிதாப நிலை எங்களை வெகுவாக வாட்டியது. நூலகங்கள் வசதிக் குறைவாக இருந்ததோடு, நூல்களின் எண்ணிக்கையும் மிக சொற்ப அளவினதாக இருந்தது மிகுந்த வருத்தத்தை அளித்தது. புதிய புத்தகங்களின் வருகை அறவே இல்லை எனலாம்.

நான் அமெரிக்கா திரும்பிய பிறகு, இந்நிலையை மாற்ற ஏதாவது செய்தாக வேண்டும என்று எனது அன்னையும் ஆலோசனை வழங்கியதால் உற்சாகமடைந்தேன். நானும் எனது தோழி பிரியா தல்ரேஜாவும் இணைந்து இந்த அமைப்பை உருவாக்கினோம் என்று கூறுகிறார்.

இந்த அமைப்பு அமெரிக்காவிலுள்ள நூலகங்களிலிருந்தும் தன்னார்வத்துடன் செயல்படும் கொடையாளர்களிடமிருந்துமூ புத்தகங்களைப் பெற்று அவற்றை இந்தியாவிலுள்ள வசதியற்ற பள்ளிகளுக்கும் அனாதை இல்லங்களுக்கும் அனுப்பத் திட்டமிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின்படி இதுவரை 2,500க்கும் மேற்பட்ட புத்தகங்களைச் சேகரித்துள்ளது. சேகரிக்கப்பட்ட புத்தகங்களை அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவிற்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்திற்காக நிதி திட்டும் முயற்சியாக நடன நிகழ்ச்சி ஒன்று நடைபெறவுள்ளது.

நடன நிகழ்ச்சி பற்றிய விவரங்கள் :

Sep 09 - Sunday 4.00 p.m.
Cubberley Theatre, 4000 Middlefield Road, Palo Alto.

Sponsor : The Indo-American Community, Service Center (ICSC), http://www.indo-american.org

நல்ல புத்தகங்கள் - நல்ல நண்பர்கள் என்பதன்படி, ஆதரவற்ற மற்றும் வசதியற்ற குழந்தைகளுக்கு நல்ல நண்பர்களை உருவாக்கித் தர விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :

Sam Rao (ICSC) : 408 - 748 - 1771
Buvana Sharma : 408 - 257 - 6447
Email : queenearth@yahoo.com
http://www.indo-american.org

© TamilOnline.com