மசாலா சென்னா
மசாலா சென்னா (வெள்ளைக் கடலை) இன்றைய மாலைநேர சிற்றுண்டி ஆகும். இது சில நேரங்களில் சப்பாத்தி, பரோட்டா போன்றவைகளுக்குத் தொட்டுக் கொள்ளவும் பயன்படும். பீட்ரூட் அல்வா செய்வதற்குச் சுலபமானது, சுவையானதும் கூட. நாம் இப்பொழுது மசாலா சென்னா, பீட்ரூட் அல்வா செய்யும் முறையைப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

வெள்ளைக் கடலை - 1 கிண்ணம்
பட்டை, லவங்கம், ஏலக்காய் - 5 கிராம்
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

அரைப்பதற்கு

கறிவேப்பிலை - 2 ஆர்க்கு
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - 1 கட்டு
இஞ்சி - 1 இன்ச்
பூண்டு - 7 பல்
வெங்காயம் - 2
மிளகுத் தூள் - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 3/4 தேக்கரண்டி
தக்காளி - 3

செய்முறை :

வெள்ளைக் கடலையை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைக்கவும்.

வேக வைப்பதற்கு முன் கடலையை நன்றாக கழுவி விடவும்.

மசாலாவை அரைத்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி அதில் பட்டை, லவங்கம், ஏலக்காய், அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்த்து வதக்கவும். (எண்ணெய் தனித்து வரும் வரை வதக்கவும்).

அத்துடன் வேக வைத்துள்ள உப்பு, வெள்ளைக் கடலையைச் சேர்க்கவும். (அடுப்பில் தீயைக் குறைத்து வைக்கவும்)

சூடாகக் கடலையைக் கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறவும்.

நளாயினி

© TamilOnline.com