சீடை
அழகான சின்னச் சின்ன உருண்டைகளாக சுவையூட்டும் பலகாரம் ஒன்று உண்டென்றால், அது சீடை தான். இனி, சமையலறைக்குள் போவோமா?

தேவையான பொருட்கள்

புழுங்கல் அரிசி அல்லது பச்சரிசி - 400 கிராம்
உளுந்தம் பருப்பு - 50 கராம்
தேங்காய் மூடி - 1
வெண்ணெய் (அ) டால்டா - 50 கிராம்
சீரகம் - 1 டீ ஸ்பூன்
உப்பு - 3/4 டேபிள் ஸ்பூன் (ஒரு கைப்பிடியில் பாதி)
எண்ணெய் - 1/4 கிலோ

செய்முறை

அரிசியை லேசாக வறுத்துச் சற்று கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

உளுந்தம் பருப்பை நன்கு சிவக்க வறுத்த நைசாக அரைத்துக் கொள்ளவும்.

இரண்டு மாவையும் ஒன்றாகக் கலந்து அதில் தேங்காயைத் துருவிப் போட்டு உப்புக் கரைத்து விடவும்.

பிறகு சீரகத்தையும் வெண்ணெயையும் சேர்த்துத் தேவையான அளவு தண்ணீரும் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து ஒரு வெள்ளைத் துணியில் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிப் போடவும்.

வாணலியில் எண்ணெயை விட்டுக் காய்ந்ததும் தாராளமாக வேகும்படி எண்ணெய் கொண்ட மட்டும் சீடைகளைப் போட்டு சல்லடைக் கரண்டியால் கலக்கி விட்டுப் பொன்னிறமாக வேகவிட்டு ஓசை அடங்கியதும் எடுக்கவும்.

குறிப்பு : சீரகத்திற்குப் பதில் வெள்ளை எள்ளைச் சேர்த்தும் சீடை தயாரிக்கலாம்.

நளாயினி

© TamilOnline.com