பட்டர் பிஸ்கட்
தேவையான பொருட்கள்

மைதா - 400 கிராம்
சர்க்கரை - 400 கிராம்
வெண்ணெய் - 100 கிராம்
டால்டா - 500 கிராம்
சமையல் சோடா - 1/4 ஸ்பூன்

செய்முறை

மைதா மாவுடன் 4 டீ ஸ்பூன் சர்க்கரை, சமையல் சோடா சேர்த்துத் தண்ணீர் விட்டு மிருதுவாகப் பிசைந்து வைக்கவும்.

10 நிமிடம் கழித்துப் பிசைந்த மாவை மறுபடியும் நன்கு பிசைந்து அகலமான மனைப்பலகையில் வைத்து 1/4 அங்குலத்திற்குச் சற்று கூடுதல் கனமாகப் பரப்பிக் கொள்ளவும்.

பிறகு 1 அங்குல அகலம், 1 1/2 அங்குல நீளம் உள்ளதாகத் துண்டுகள் செய்யவும்.

பக்கவாட்டிலுள்ள மாவையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து முன்பு துண்டு போட்ட அளவுப்படி பிஸ்கட் செய்து கொள்ளவும்.

வாணலியில் டால்டாவை ஊற்றிக் காய வைத்து மிதமான தீயில் பிஸ்கட்டுகளை அளவாகப் போட்டுக் கரண்டியால் திருப்பிவிட்டு பிஸ்கட்டுகள் சந்தனக் கலரில் வெந்ததும் எடுத்து வைக்கவும்.

சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் விட்டுக் கம்பிப் பாகாகக் காய்ச்சி இறக்கி ஆற வைக்கவும்.

சர்க்கரைப் பாகு கொஞ்சம் ஆறியதும் பிஸ்கட்டுகளை அதில் தோய்த்து எடுக்கவும்.

நளாயினி

© TamilOnline.com