கேக் வகைகள்
வழக்கமாக இனிப்புப் பண்டங்களில் கூடுதல் சுவைக்காக முந்திரிப் பருப்பைச் சேர்ப்பது தான் வழக்கம். ஆனால், முற்றிலும் முந்திரிப் பருப்பை மட்டுமே அடிப்படையாகப் பொருளாக வைத்து ஒரு வித்தியாசமான கேக் வகையைத் தயாரிப்போமா!

பிஸ்ஸா, இத்தாலி நாட்டிலிருந்து இறக்குமதியாகி இருக்கும் உணவு வகை இது. தற்போது எல்லா மாநகரங்களின் சிறப்பான உணவு வகையான வலம் வந்து கொண்டிருக்கிறது. அதையும் தான் செய்து பார்த்து விடுவோமே... ரெடி தானே!

முந்திரி கேக்

தேவையான பொருட்கள்

முந்திரிப் பருப்பு - 250 கிராம்
சர்க்கரை - 500 கிராம்
நெய் - 100 கராம்
ஏலக்காய்ப் பொடி - 1 டீ ஸ்பூன்
பச்சைக் கற்பூரம் - சிறிதளவு

செய்முறை

முந்திரிப் பருப்பை நன்றாகக் காய வைத்து மிக்ஸியில் போட்டு 1 டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும்.

சர்க்கரை கொதிக்கும் பொழுது மேலே வரும் அழுக்கை எடுத்து விவும். பாகு வெந்து கம்பிப் பதம் ஆனவுடன் முந்திரிப் பருப்பு மாவைத் தூவிக் கிளறிக் கொண்டே வரவும்.

எல்லா மாவையும் சேர்த்துக் கிளறியவுடன் நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கிளறவும். வெளுப்பாக நுரைத்து வந்ததும் ஏலப்பொடி, பச்சைக்கற்பூரம் சேர்த்துக் கிளறி நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டிச் சமப்படுத்திக் கத்தியால் கீறி விட்டு ஆறிய பின் எடுத்து வைக்கவும்.

குறிப்பு :

இதே போல் முந்திரிப் பருப்பிற்கு பதில் பாதாம் பருப்பைச் சேர்த்து பாதாம் கேக் செய்யலாம். பாதாம் பருப்பை ஊற வைத்துத் தோலை எடுத்து விட்டுப்பிறகு வெய்யிலில் காண வைத்து மாவாக்கவும்.

நளாயினி

© TamilOnline.com