என்னுடைய வீட்டுப் பாடத்தை நாய் சாப்பிட்டு விட்டது என்று சாக்கு சொல்வது போல இருக்கிறதுஔ என்று ஸான் ஹோசே மெர்க்குரி நியூஸ்ஒ பரிகசிக்கிறது ஃபிளாய்ட்
லாண்டிஸை. சென்ற மாத தென்றல் இதழில் Tour de France போட்டியில் அவர் வெற்றி பெற்றதைப் பாராட்டி எழுதிய மை உலரும் முன் அவர் ஊக்க சக்தி மருந்துகள் உதவியால்
வெற்றி பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டார். அவரது சிறுநீரில் Testosterone எனப்படும் இயக்கு நீரின் (ஹார்மோன்) விகிதம் சராசரிக்கும் அதிகமாக இருப்பதாக நிரூபிக்கப்பட்டு
விட்டது. ஆனால் அவரோ இது இயற்கை யாக ஏற்பட்ட நிலையே ஒழிய, மற்ற காரணங் களால் அல்ல என்று சாதித்து வருகிறார்.
சமீப காலமாக விளையாட்டுகளில் ஊக்க சக்தி மருந்துகளின் புழக்கம் பற்றிய சர்ச்சை நிலவி வருகிறது. அதுவும், சான் ஃபிரான் சிஸ்கோ வளைகுடாப் பகுதியைச் சேர்ந்த பால்கோ
என்ற நிறுவனத்தின் மேல் நடந்த விசாரணையில் மேரியன் ஜோன்ஸ், பாரி பாண்ட்ஸ், ஜேஸன் ஜியாம்பி, பில் ரோமனோவ்ஸ்கி போன்ற புகழ் பெற்ற விளையாட்டு வீரர்களின் பெயர்கள்
அடிபட்டதால் இந்த சர்ச்சை தீவிரமாகியிருக்கிறது.
விளையாட்டுகளில் ஊக்க சக்தி மருந்துகளின் உபயோகம் ஒன்றும் புதிதல்ல. கி.மு. எட்டாம் நூற்றாண்டில் கிரேக்க விளையாட்டு வீரர்கள் ஆட்டின் பிரத்தியேக உறுப்பான விறைப்
பகுதியைச் சாப்பிடுவார் களாம் - இந்தக் காலத்தில் testosterone-ஐ அதிகப் படுத்த ஊக்க மருந்துகள் சாப்பிடு வதற்குச் சமானம். கேட்டாலே போன வாரம் சாப்பிட்ட மசால் தோசை
குமட்டிக் கொண்டு வருகிறது!
நான்கு முறை மிஸ்டர் யுனிவர்ஸ் பட்டமும், ஏழு முறை மிஸ்டர் ஒலிம்பியா பட்டமும் பெற்றவர் கலிஃபோர்னியாவின் தற்போதைய ஆளுநரான ஆர்னால்ட் ஸ்காவட்ஸெனெகர். அவர்
Dianabol என்ற ஊக்க மருந்து எடுத்துக் கொண்டதை ஒப்புக் கொண்டுள்ளார். அவரது உடல் வலுவும், கட்டமைப்பும் தான் அவர் திரைப்படங்களில் வெற்றிப் பெறக் காரணம்
என்பதும், அந்த வெற்றியே அவர் ஆளுநர் ஆவதற்கு உதவியது என்பதும் மறுக்க முடியாதது. ஆக, ஊக்க மருந்து சாப்பிடுவதில் என்ன தவறு என்று கேட்கத் தோன்றுகிறது. ஊக்க
மருந்துகளுக்கான எதிர்ப்பு இரண்டு பிரிவுகளில் இருந்து வருகிறது. ஒன்று விளையாட்டுகளில் ஒழுக்க முறையைப் பற்றிக் கவலைப் படுபவர்கள், மற்றொன்று மருத்துவ ரீதியாக இந்த
மருந்துகளின் பின் விளைவுகளைப் பற்றிக் கவலைப் படுபவர்கள்.
எதிர்ப்பைப் பற்றிப் பேசுவதற்கு முன், ஊக்க மருந்துகள் எப்படிச் செயல் படுகின்றன என்று பார்ப்போம். இதில் மூன்று வகை உள்ளன. ஒன்று anabolic steroid என்று அழைக்கப்
படுகிறது. இது சராசரி மனிதனை விட 20 சதவிகிதம் வரை அதி வேகத்தில், புரதச் சத்தைத் தேக்க வைத்து உடல் தசைகளை வலுப்படுத்துகிறது. டாக்டர் ஸீக்லர் (Dr. Ziegler) 1956-ல் சீபா ஃபார்மசூட்டிகல் என்ற நிறுவனத்திற்காக இந்த மருந்தைக் கண்டு பிடித்தார். இது Dianabol என்ற பெயரில் விற்கப்பட்டது. 1990-ல் தான் இந்த மருந்து
தடை செய்யப்பட்டது. ஆக, ஆர்னால்ட் இதைப் பயன் படுத்திய சமயம் அது சட்டத்திற்குப் புறம்பான செயலல்ல. மற்றொன்று stimulants என்று கூறப்படும் எழுச்சியூட்டும் வகை
மருந்துகள். இவை இரத்த ஓட்டம், இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு போன்றவற்றை அதிகரிப்பதின் மூலம் செயல் படுகின்றன. இவை வேக ஓட்ட வீரர்கள், நீச்சல் போட்டிகளில்
பங்கு பெறுபவர்கள் போன்றவர்கள் உபயோகிப்பது. சோர்வைக் குறைத்து வேகமாகச் செயல்படும் திறனைக் கொடுப்பவை. மூன்றாம் வகை Diuretics என்று அழைக்கப் படும் உடல்
நீரைக் குறைக்கும் மருந்துகள். இதை மல்யுத்தம், பளுதூக்குதல் போன்ற போட்டி களில் பங்கு பெறும் வீரர்கள் பயன் படுத்துவார்கள். இது விரைவாக உடல் நீரைச் சிறுநீறாக
வெளியேற்றுவதால், 24 மணி நேரத்திற்குள் 4 சதவிகிதம் வரை எடையைக் குறைக்க முடியும். அதனால் விளையாட்டு வீரர்கள் குறைந்த எடைப் பிரிவில் பங்கெடுத்துக் கொள்ள முடியும்.
கடந்த நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து விளையாட்டுகளில் ஊக்க மருந்துகளின் ஆதிக்கம் அதிகரித்தன. இதைப் பற்றிய பரவலான சர்ச்சை நடந்த வண்ணம் இருந்தது. சில சர்வதேச
விளையாட்டு அமைப்புகள் இந்த மருந்துகளைத் தடை செய்ய ஆரம்பித்தன. 1960-ல் ரோமில் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டியில் டென்மார்க்கைச் சேர்ந்த நுட் ஜென்ஸன் (Knud Jensen)
மிதிவண்டிப் போட்டியின் போது இறந்தார். பிரேத பரிசோதனையில் அவர் ஊக்க மருந்துகள் எடுத்துக் கொண்டது தெரிய வந்தது. 1967-ல் டாம் சிம்சன் (Tom Simpson) என்ற
மற்றொரு வீரர் Tour de France போட்டியின்போது இறந்தார். இந்த இறப்புகளால் ஊக்க மருந்துகளைத் தடை செய்வதற்கான எதிர்ப்புகள் வலுத்தன. இறுதியாக 1968-ல் மெக்ஸிகோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்த மருந்துகள் தடை செய்யப் பட்டன. 1998-ல் மீண்டும் Tour de France போட்டிகளின் போது ஒரு சர்ச்சை.
ஃபிரஞ்சு போலீஸ் செய்த அதிரடி வேட்டையில் தடைசெய்யப்பட்ட பல மருந்துகள் போட்டி வீரர்களிடம் இருந்து பறிக்கப் பட்டன. அதனால் ஊக்க மருந்துகளைத் தடை செய்ய,
கண்காணிக்க ஒரு தனி அமைப்பு தேவை என்று உணர்ந்த சர்வதேச ஒலிம்பிக் குழு World Anti-Doping Agency (WADA) என்ற அமைப்பை 1999-ல் உருவாக்கியது. WADA அமைப்பின் இணைய தளத்தில் தடை செய்யப் பட்ட மருந்துகளின் முழ நீளப் பட்டியல் மட்டுமின்றி, செயற்கையாக ஊக்குவிக்கும் முறைகளையும் பட்டியலிட்டுக்
காண்பிக்கிறார்கள். புதிய முறைகளில் ஏமாற்றுபவர்களைக் கண்டுபிடிப்பதே இந்த அமைப்பின் முழு வேலை. கடந்த 20 ஆண்டுகளாக, இரத்தத்தில் சிவப்பு அணுக்களை அதிகரித்தல்,
மாற்று இரத்தம் செலுத்துதல் (blood transfusion), இரத்ததில் ஆக்ஸிஜனை அதிகரித்தல் என்று புதிய ஏமாற்று முறைகள் வந்த வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக சமீபத்தில்
வந்திருக்கும் மரபணு மாற்று சிகிச்சை (gene therapy) கவலைக்குறியது. மரபணுத் துறையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டால் மூன்று வயதில் 250 பவுண்டுகள் தூக்கும்
குழந்தையையும், நொடியில் மராத்தான் ஓட்டத்தை முடிக்கும் சூப்பர் பேபிகளையும் உருவாக்கி விடுவார்கள்!
இந்த மருந்துகளின் பின்விளைவுகள் பற்றி விஞ்ஞான ரீதியான கட்டுரைகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இரும்பு மனிதன் போல் தோற்றமளிக்கும் ஆர்னால்ட் ஸ்காவட்ஸெனெகர்
1997-ல் இருதயக் கோளாறைச் சரிசெய்ய அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார். அது ஊக்க மருந்து களால் வந்த பின் விளைவா என்பது சரிவரத் தெரியாமல் பூசி மழுப்பி
விட்டார்கள். Sterods.com என்ற இணையத் தளம் பின்விளைவுகளைப் பட்டியலிட்டுக் காட்டி, இதுவும் ஒரு பெரிய விஷயமா? உடல் நிலை சரியில்லை என்று டாக்டர்கள் கொடுக்கும்
எந்த மருந்திலும்தான் இந்த மாதிரியான பின்விளைவுகள் உள்ளனஔ, என்று வாதிக்கிறது. இது போன்ற பல இணைய தளங்களில், உங்களுக்கு எந்த மாதிரியான ஊக்க மருந்து
வேண்டும்?ஔ என்று கேட்டு பளிச், பளிச்சென்று கண்ணைச் சிமிட்டும் வண்ணமயமான விளம்பரங்களுடன் விற்பனை செய்கின்றனர்.
சர்வதேச அரங்கில்தான் இந்தப் பிரச்சினை, பணத்திற்காகவும் புகழுக்காகவும்தான் இதைச் செய்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். இந்த மருந்துகள் உயர்நிலைப் பள்ளி விளையாட்டிலும் நுழைந்து விட்டன.
2005-ல் நோய்வாய் கட்டுப்பாட்டு மையம்
(Center for Disease Control) நடத்திய கணக்கெடுப்பில் 9-ஆம் வகுப்பில் இருந்து 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களில் 6 சதவிகிதம் பேர் ஊக்க மருந்துகள் எடுத்துக்
கொள்கிறார்கள் என்று நிர்ணயம் செய்திருக் கிறது. பணமும், புகழும் உள்ள தங்களுடைய ஹீரோக்களான விளையாட்டு வீரர்களிடம் இருந்து இளைஞர்கள் கற்றுக் கொள்ளும் பாடம்
இதுதான்!
விளையாட்டில் ஒழுக்க முறை இருக்க வேண்டாமா? இப்படி ஏமாற்றலாமா?ஔ என்று ஒரு சாரார் கேட்கின்றனர். தங்களுடைய ஆட்டக்காரர்களுக்குச் சாதகமாக ஆடுதளத்தை
அமைத்துக் கொள்கிறார்கள். ஹாலிவுட் நடிகர்கள் வயதைக் குறைக்க அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள். பாப் பாடகர்கள் தங்கள் குரலை டிஜிட்டல் முறையில் குறுந்தட்டில்
டச் அப் செய்து கொள்கிறார்கள். இப்படியெல்லாம் இருக்க, ஏன் ஊக்க மருந்து சாப்பிடும் விளையாட்டு வீரர்களை மாத்திரம் தனிப்படுத்துகிறீர்கள்?ஔ என்று நியூ யார்க் டைம்ஸ்
கட்டுரை ஆசிரியர் ஜேம்ஸ் போனிவாசிக் கிண்டல் அடிக்கிறார்.
பல வருடங்களுக்கு முன்னால் ரீடர்ஸ் டைஜஸ்டில் படித்த கட்டுரை நினைவிற்கு வருகிறது. கட்டுரை ஆசிரியர் பெயர் ஞாபகமில்லை. அவர் சிறு வயதில் ஐஸ் கிரீம் கோன்கள் அடிவரை
நிரப்பப் படுவதில்லை என்பதை அறிந்த போது எழுந்த ஏமாற்றம் தான் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட முதல் ஏமாற்றம் என்று குறிப்பிட்டிருந்தார். ஃபிளாய்ட் லாண்டிஸ் போன்ற
விளையாட்டு வீரர்களின் சாதனைகளைப் பாராட்டி மகிழ்ந்து ஏமாறும் சராசரி ரசிகர்களான நாம், காலி ஐஸ்கிரீம் கோனை கையில் வைத்துக் கொண்டு உதட்டைப் பிதுக்கி
ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் குழந்தைகள் மாதிரிதான்!
சேசி |