ஜெயலலிதா எப்படி மீளப் போகிறார்?
தமிழக அரசியலில் அதிமுக ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின்னர் திமுக பழிவாங்கப்படும் எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது. கலைஞர், ஸ்டாலின் அமைச்சர்கள் மீத பல்வேறு குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக சுமத்தப்பட்டன.

கலைஞர், மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன், டி.ஆர். பாலு, மேயர் ஸ்டாலின் உட்பட பலரும் கைது செய்யப்பட்டனர். பத்திரிகையாளர்கள் கைது, சன் தொலைக்காட்சிக்கு மிரட்டல், எவரும் எதிர்பார்க்காத நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருந்தன.

மத்திய - மாநில அரசுகளுக்கிடையிலான உறவில் மோதல் போக்கை மாநில அரசு கடைப்பிடிப்பதாக மத்திய அரசு கண்டித்தது. உடனடியாக மத்திய அமைச்சர்கள் விடுவிக்கப்பட வேண்டுமென எச்சரித்தது. தமிழக அரசு மீது மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோஷங்கள் முழங்கின.

356வது பிரிவை பயன்படுத்தி ஜெயலலிதாவின் சட்டவிரோத ஆட்சியை கலைக்க வேண்டுமென பாஜகவினர் தீர்மானமே போட்டார்கள். தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் கூட 356 சட்டப்பிரிவுக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்து வந்தார்கள்.

மத்திய அரசு இரு குழுக்களை தமிழகத்துக்கு அனுப்பியது. ஒன்று தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பெர்னாண்டஸ் தலைமையிலான குழு. மற்றது உள்துறை அமைச்சகத்திலிருந்து கெளசல் தலைமையிலான குழு. இவ்விரு குழுக்களும் தமிழக நிலவரம் குறித்து தமது அறிக்கையை மத்திய அரசுக்கு கொடுத்தன.

தமிழக ஆளுநல் பாத்திமா பீவியை மீண்டும் மத்திய அரசு ஆளுநல் பதவியிலிருந்து திரும்பப் பெற முடிவு எடுத்தது. அதற்குள் பாத்திமா பீவியே தனது பதவியிலிருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை கொடுத்து விட்டார். தற்காலிக ஆளுநராக ஆந்திர மாநில ஆளுநர் ரங்கராஜன் கூடுதல் பொறுப்பாக தமிழகத்துக்கும் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக நிலைமை தொடர்பாக மத்திய அரசு பல்வேறு ஆலோசனைகளுக்கு பிறகு தமிழக அரசுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்ப முடிவெடுத்து கடிதமும் அனுப்பியது. கைது நடவடிக்கையில் ஈடுபட்டு தவறு செய்த காவல் துறையின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசு கேட்டிருந்தது.

ஆனால் தமிழக அரசு காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க தயாராக இல்லை. விசாரணை செய்தவற்காக நீதிபதி ராமன் தலைமையில் ஒரு நபல் கமிஷனை நியமித்துள்ளது. இந்த கமிஷன் நடவடிக்கை காலத்தை இழுத்தடிப்பதற்காக போடப்பட்டது. திமுக இந்த கமிஷனை நிராகரிக்கிறதென தலைமை தெரிவித்துள்ளது.

தொடர்ந்து மத்திய அரசுடன் மோதல் போக்கை தமிழக அரசு - ஜெயலலிதா - கடைப்பிடிக்கும் போக்கு இறுக்கமாக இருந்தது. எப்படியும் மத்திய அரசு தமிழக அரசு எச்சரிக்கை கடிதத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான ஆக்ரா பேச்சு வார்த்தையினால் மத்திய அரடிசன் பார்வை சற்று தணிந்திருந்தது. மீண்டும் தமிழகம் மீது மத்திய அரசின் பார்வை இறுகும்.

மத்திய அரசின் எச்சரிக்கைக் கடிதத்துக்கு மதிப்பு கொடுக்காமல் தமிழக அரசு விசாரணைக் கமிஷன் அமைத்திருப்பது மத்திய அரசுக்கு சவால்விடும் போக்காகவே மத்திய அமைச்சர்கள் மட்டத்தில் சிலர் இதனை அழுத்திப் பேசுகின்றனர். மத்திய அரசின் சார்பில் விசாதணைக் கமிஷன் அமைத்து தீவிர நடவடிக்கையில் இறங்க வேண்டும். மத்திய, மாநில உறவுக்கு தமிழகம் ஓர் தவறான அணுகுமுறையை வெளிப்படுத்துவது எதிர்காலத்துக்கு நல்லதல்ல. ஆகவே ஜெ. அரசு மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மத்திய அமைச்சரவை பரிசீலித்து வருகிறது.

தமிழக காவல்துறையினரின் அத்துமீறல் பற்றி நாடாளுமன்ற உரிமைக் குழுவிடம் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் புகார் கொடுத்துள்ளார். இதன் மீதான விசாரணை நாடாளுமன்றம் கூடும்போது உரிமைக்குழுவில் இது தொடர்பாக விசாரணை நடைபெறப் போகிறது.

அதிமுக அரசுக்கு எதிராக திமுக சாத்தியமான அனைத்து வழிவகையிலும் முயற்சிகளை மேற்கொள்ளும். மத்திய அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுத்து தமிழக அரசு மீதான நடவடிக்கைகளை கடுமையாக்க முயற்சி செய்யும்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது பதவியை தக்க வைத்துக் கொள்ள எப்படியும் ஏதாவது ஒரு தொகுதியில் தேர்தலை சந்திக்கும் வகையில் தனது நடபடிக்கைகளை திட்டமிடத் தொடங்கி விட்டார். நீதிமன்ற வழக்குள் ஜெயலலிதாவுக்கு எதிராக தடைகளாக இருப்பதும் தவிர்க்க முடியாது. எப்படி ஜெயலலிதா மீளப் போகிறார். இதுவே தற்போது முதன்மைக் கேள்வியக உள்ளது.

துரைமடன்

© TamilOnline.com