மஜ்னு கேசட் வெளியீட்டு விழா
இது பிரசாந்த் நடிக்கும் படங்களின் கேசட் வெளியீட்டு விழாக்கள் சீசன். 'விரும்புகிறேன்', 'ஸ்டார்', 'மஜ்னு' படங்களின் கேசட் வெளியீட்டு விழாக்கள் அடுத்தடுத்து நடைபெற்றிருக்கிறது.

மஜ்னு விழா ஒரு வகையில் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் வரவேற்கப்பட்டு ஆங்கிலத்திலேயே பொழிப்புரை, விளக்கவுரை வழங்கப்பட்டு பெரிதும் சிலாகிக்கப்பட்ட இந்தத் தமிழில் படத்தின் கேசட் வெளியீட்டு விழாவில் அவசரக் கோலம அள்ளித் தெளித்ததுபோல கொஞ்சூண்டு டிரஸ் போட்டுக் கொண்டு வந்து சேர்ந்தார் உலக அழகி லாரா தத்தா.

பிரசாந்த், நாயகி ரிங்கி கண்ணா, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், லாராதத்தா, வைரமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் லாராதத்தா எப்படி வந்தார் என்பது தான் அனைவரின் கேள்வி? 'மஜ்னு' படத்தைத் தொடர்ந்து சி.டி.வி. தயாரிக்கும் படத்தில் அரிஜுனுகூகு ஜோடியாக லாராதத்தா ஒப்பந்தமாகியிருக்கிறார் என்பது வெளிவராத ரகசியத் தகவல்.

© TamilOnline.com